நான் 3 வேளை சாப்பிட காரணமே மயில்சாமி அண்ணன்தான்! கேபிஒய் யோகி உருக்கம்
சென்னை: நான் சாப்பிட காரணமே மயில்சாமி அண்ணன்தான் என கலக்க போவது யார் நிகழ்ச்சியின் யோகி உருக்கமாக தெரிவித்துள்ளார். மயில்சாமி காமெடி நடிகர் மட்டுமில்லை, அவர் மிமிக்ரியும் நன்றாக செய்வார்.
நடிகர் மயில்சாமி, சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர். இவர் தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். விவேக், வடிவேலு உள்ளிட்டோருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

ரஜினி, விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார். இவர் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருந்தார். நிறைய விவாதங்களில் பங்கேற்று பேசியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
சென்னை பெருவெள்ளம்
2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது ரிஸ்க் எடுத்து உதவியதாக மயில்சாமி மகன் தெரிவித்துள்ளார். பெருவெள்ளத்தின் போது எங்கு பார்த்தாலும் தண்ணீர் என்பதால் மயில்சாமியின் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனராம். ஆனால் மயில்சாமி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதால் வர மறுத்துவிட்டாராம்.
மனைவியின் நகைகள்
கைல இருந்த பணம், மனைவியின் நகைகளை எல்லாம் அடகு வைத்து உதவி செய்தாராம். அவருக்கு அப்போதுதான் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டிருந்ததாம். அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என குடும்பத்தினர் எத்தனையோ சொல்லியும் மயில்சாமி கேட்கவில்லையாம்.
தானம் தர்மம்
ஒரு கட்டத்தில் மயில்சாமி சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் எல்லாருக்கும் உதவி செய்ததை பார்த்த தயாரிப்பாளர்கள் கூட, மயில்சாமியின் மனைவிக்கு போன் செய்து , "உங்களோட வங்கிக் கணக்கு எண்ணை கொடுங்கள், பணத்தை உங்களுக்கு செலுத்துகிறோம்" என்றார்களாம். தான் பெற்ற பிள்ளைகளுக்கு சொத்து வீடு வாசல் எதையும் சேர்த்து வைக்கவில்லை. தன்னோட சொத்து எல்லாம் ஏழைகளுக்குத்தான். தன்னோட இரு மகன்களும் உழைத்து முன்னேறட்டும் என கூறுவாராம். இப்படி ஊருக்கெல்லாம் உழைத்த மயில்சாமி திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.
மயில்சாமிக்கு மாரடைப்பு
ஆம்! கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த சிவராத்திரி விழாவின் போது அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மயில்சாமி உயிருடன் இருந்தவரை, அவர் ஏராளமானோரின் கண்ணீரை துடைத்துள்ளார்.
மழை வெள்ளத்தின் போது
நிறைய பேருக்கு பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்தியுள்ளார். அது போல் வீட்டு வாடகை, கல்யாண செலவுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை செய்துள்ளாராம். புயலின் போது டெல்டா மாவட்டத்திற்கு போய் அங்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டார். பசியோடு வருவோருக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்பியிருந்தார்.
நன்மைகள்
இவர் செய்த பல நன்மைகள் அவர் இறந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வருகின்றன. இந்த நிலையில் நான் இன்னைக்கு சாப்பாடு சாப்பிட காரணம் மயில்சாமி அண்ணன்தான் என கேபிஒய் யோகி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
யோகி உருக்கம்
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், "பசித்தவனுக்கு சாப்பிட மீன் குடுக்காத, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுனு சொல்வாங்க. நான் இன்னைக்கு சாப்பிடுற ஒவ்வொரு சாப்பாடும் மயில்சாமி அண்ணன் குடுத்ததுதான். 1996 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து மயில்சாமி அண்ணனோட மிமிக்ரியை பார்த்து நானும் மிமிக்ரி செய்ய ஆரம்பிச்சேன் என யோகி தெரிவித்துள்ளார்.
யார் இந்த யோகி
கேபிஒய் யோகி, கவுண்டமணி போல் பாடிலேங்குவேஜில் மிமிக்ரி செய்வார். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அது போல் பெண் வேடம் போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications