மலைடா.. கிருத்திகா அண்ணாமலை.. சின்னத் திரையின் கெத்து நடிகை!
சென்னை: நல்ல உசரமான நடிகைகள் பெரிய திரையில் மட்டும் இல்லை.. டிவியிலும் இருக்காங்க.. அதில் முக்கியமானவர் கிருத்திகா அண்ணாமலை.. மெட்டி ஒலி கிருத்திகான்னா நல்லா தெரியும்.
செம ஹைட்... சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா. நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான். இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது.
இப்ப இருக்கிற சூழ்நிலையில திரைத்துறையினர் எல்லாரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். இவங்களுக்கு நேரம் போகவில்லையாம். அதனால் இணையதளத்தில் ரசிகர்களை தங்களுடைய போட்டோக்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்கள்.

முதல் ஒலி
இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார். சீரியல்களில் இவருடைய கேரக்டர் மக்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தல் உயரமும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அதன்பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அடை மழை தான்.

செம வில்லத்தனம்
தனக்கு வில்லத்தனம்தான் செட்டாகும் என்று சட்டென புரிந்து கொண்ட கிருத்திகா.. அதிரடி வில்லியாக மாறினார். பல மெகா சீரியல்களில் நடித்து பல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். முந்தானைமுடிச்சு, செல்லமே ,வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த சின்னத்தம்பி சீரியலிலும் அதகளம் செய்திருந்தார்.

சூப்பர் வில்லி
இவருக்கு வில்லி கேரக்டர் தான் பிளஸ் பாயிண்ட். துணை கதாநாயகி ஆக நடித்தாலும் இவர் வில்லி கேரக்டரில் நடிக்கும்போது மக்கள் இவரை உண்மையாகவே இவர் அப்படிதான் என்று கூட நம்பி இருக்கிறார்களாம் அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு இருக்கிறது. வெளியில் போனால் நிறைய பேரிடம் திட்டு வாங்குவாராம். ஆனால் நிஜத்தில் ரொம்ப சாதுவாம்.. அதிர்ந்து கூட பேச மாட்டாராம். ரொம்பச சாப்ட், லவ்லி கேரக்டராம்.

சூப்பர் டான்ஸ்
சீரியல் மட்டுமில்லாம கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கவர்ச்சி ஆட்டமும் போட்டார். இந்த ஷோவில் இவர் ஆடிய ஆட்டத்தை இளைஞர்கள் இன்று வரை மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவு ரசிகர்களுக்கு கிக் ஏற்றினார். அவரது ஆட்டம் பல ரசிகர்களை இவர் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. இவருடைய உயரம்தான் இவரது டான்ஸுக்கும் எடுப்பாக இருந்தது.

உலா வரும் போட்டோக்கள்
இப்போது ஷூட்டிங் இல்லை. புதிய சீரியல்களையும் காணவில்லை. போரடிக்குது. இதனால் பலரும் போட்டோக்களைப் போட்டு ஒப்பேற்றி வருகின்றனர். அந்த வகையில் கிருத்திகாவின் புகைப்படங்களும் பல உலா வருகின்றன.அதில் பல புதியவை.. பல பழையவை. அந்த போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் கிருத்திகாவின் பழைய நடிப்பை சிலாகித்துக் கொண்டுள்ளனர்.

மிரட்டல் கோமதி
கிருத்திகா முதல் முறையாக வில்லத்தனம் செய்தது என்றால் அது ராதிகாவின் தொடரான செல்லமேயில்தான். அதில் கோமதி என்ற கேரக்டரில் மிரட்டியிருப்பார் கிருத்திகா. அடிப்படையில் இவர் பூனை போல சாப்ட்டானவர் என்றாலும் இந்த வில்லி கேரக்டரில் நன்றாக நடித்திருப்பார். அதன் பின்னர் முந்தானை முடிச்சு சீரியலில் இன்னொரு வில்லத்தனத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த தொடரில் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை.

நல்ல பேர் கொடுத்த வீணை
மரகத வீணை சீரியலில் அருமையான பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் கிருத்திகா. அது அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் திருமணமாகி கணவர், குழந்தைகள் என செட்டிலாகி விட்டார் கிருத்திகா. அருமையான இல்லத்தரசியாக இப்போது வலம் வரும் கிருத்திகா,, சின்னத்திரைக்குக் கிடைத்த நல்ல நடிகை என்பதில் சந்தேகமே இல்லைங்க.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications