பாவனி உதட்டில் இப்படி பச்சக்குன்னு கொடுக்குறாரே.. கிக் ஏத்தும் கிருத்திகா
சென்னை: டிவி ஸ்டார்களும் இப்போது சினிமா ஸ்டார்களை மிஞ்சி வருகின்றனர். கொண்டாட்டத்தில் மட்டுமல்ல,, கிளுகிளுப்பிலும்தான். இப்போது அப்படி ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.
நடிகை கிருத்திகாவை அனைவரும் அறிவர்.. வில்லத்தனத்தில் மட்டுமல்லாமல் குணச்சித்திரத்திலும் கலக்கலாக நடிக்கக் கூடியவர்தான் கிருத்திகா அண்ணாமலை .
மெட்டி ஒலி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் கலக்கியவர்.. சிறப்பாக நடிக்கக் கூடியவர் கிருத்திகா .என்ன வேடம் கொடுத்தாலும் பிரமாதமாக நடிப்பார்.

கெட்டப் சூப்பர்
லேட்டஸ்டாக அவர் புகுந்து விளையாடியது சின்னத்தம்பி சீரியல்தான் . அவரது சிறப்பான நடிப்புக்காக அந்த சீரியலைப் பார்த்தவர்கள் பலர் . கிருத்திகாவின் விதம் விதமான நடிப்பு மட்டுமல்லாமல் அவரது கெட்டப்பும் கூட ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதாகும் .

சதை குறைஞ்சு போச்சு
முன்பெல்லாம் நல்ல குண்டாக இருப்பார் கிருத்திகா .ஆனால் சமீபத்தில் கடுமைாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்து சிக்கென அழகாகி விட்டார் கிருத்திகா .நம்ம கிருத்திகாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு மெலிந்து அழகாகி விட்டார் கிருத்திகா.

இப்ப க்யூட் அழகு
அட் ஏ டைமில் 20 கிலோவுக்கும் மேல் எடையைக் குறைத்துள்ளாரம் கிருத்திகா .இது நிச்சயம் பெரிய சாதனைதான் . ஒரு கிலோ கூட குறைக்க முடியாமல் பலர் தவிக்கும்போது கிருத்திகா இப்படி அதிரடி காட்டியது ஆச்சரியம்தான். மெட்டிஒலியில் அருந்ததி கேரக்டரில் கலக்கியவர் கிருத்திகா . பின்னர் செல்லமே சீரியலில் கோமதி, வம்சம் சீரியலில் ராதா, கேளடி கண்மணியில் மாலதி என வெரைட்டி காட்டினார்.

பாவனிக்கு கொடுத்த முத்தம்
கல்யாணப்பரிசு சீரியலில் சந்தியா, பிறகு மரகதவீணை ,செல்லமடி நீ எனக்கு ,பைரவி என புகுந்து புறப்பட்டவர் கிருத்திகா.இப்போது நாம சொல்லப் போற விஷயம் கிக்கானது .சமீபத்தில் நடிகை பாவனி ரெட்டிக்குப் பிறந்த நாள் . அதற்கு சிறப்பான வாழ்த்து கூறியிருந்தார் கிருத்திகா. அதுதான் விசேஷமானது. ஆமாங்க. பாவனி ரெட்டிக்கு பச்சக்கென லிப் டூ லிப் முத்தம் கொடுத்து கிக்கேற்றியுள்ளார் கிருத்திகா.

உதடு பதித்து உம்மா
அவர் போட்டுள்ள புகைப்படத்தில் பாவனி ரெட்டியின் உதட்டில் தனது உதட்டைப் பதித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் கிருத்திகா. அன்புப் பரிமாற்றம்தான் என்றாலும் ரசிகர்களுக்கு சூடாகி விட்டது .பார்த்துப் பார்த்துப் பரவசமாகிறார்களாம் .பாவனியும், கிருத்திகாவின் முத்தத்தை லயித்துப் போய் வாங்கியுள்ளார். அது மட்டுமா, கிருத்திகாவுக்கு பதிலுக்கு இவர் கன்னத்தில் பச்செக்கென அழுத்திப் பதித்து கிருத்திகாவையும் குளிர வைத்து விட்டார்.

எல்லோருக்கும் பிடித்தவர்
இவர்கள் கொடுத்துக் கொண்ட முத்தம்தான் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது .கிருத்திகா பழகி விட்டால் உயிராகப் பழகுவார் . இவருடைய தோழிகள் எல்லோருமே அதைச் சொல்வார்கள் .அந்த அளவுக்கு நட்புக்கு முக்கியத்தவம் கொடுப்பவர் கிருத்திகா .வம்சம் சீரியலில் நடித்தபோது சந்தியாவுடன் நல்ல நட்பு ஏற்பட்டது .இன்று வரை அது தொடர்கிறதாம்.. சூப்பர்தான்.












Click it and Unblock the Notifications