Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல்களில் வில்லி.. இணையதளங்களில் கில்லி.. அதகளம் செய்யும் கிருத்திகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்களில் வில்லியாகவும் இணையதளங்களில் கில்லியாகவும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் கிருத்திகா இப்ப போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணியிருக்கிறதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறார்.

கிருத்திகா.. இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இணையதளங்களில் டாப் டக்கர். 90ஸ் பேவரைட் மெட்டி ஒலி சீரியலில் கலக்கிக் கொண்டிருந்தவர். இந்த சீரியலில் நடிக்கும்போது அவர் காலேஜ் படித்துக் கொண்டிருந்தார்.

முதலில் இவருக்கு நடிப்பதற்கு பிடிக்கவில்லையாம். ஏதாவது காலேஜ் ப்ரோக்ராம்ல மட்டும்தான் கலந்து கொள்வாராம். வேறு இடங்களில் நடிப்பதற்கு எல்லாம் துளியளவும் ஆசை கிடையாதாம். அவருடைய அம்மாவின் ஆசையால்தான் நடிக்க ஆரம்பித்தாராம்.

 காலேஜில் கலக்கல்

காலேஜில் கலக்கல்

அவங்க காலேஜ் கல்ச்சுரல் ப்ரோக்ராம் நடந்துகொண்டிருக்கும்போது இவங்களை பார்த்துதான் மெட்டி ஒலி சீரியலில் நடிப்பதற்கு இவரிடம் கேட்டிருக்கிறார்கள். அறிமுகமான முதல் சீரியலில் இவருக்கு ரசிகர்கள் அதிகமானதை தொடர்ந்து பல சீரியல்கள் தொடர்ந்து வந்திருக்கிறது. இவரது உயரமான உடல் அமைப்பை பார்த்து இவருக்கு பெரும்பாலும் வில்லி கேரக்டரில் தான் நடிக்க வாய்ப்பு வந்திருக்கு.

 உடல்வாகு அப்படி

உடல்வாகு அப்படி

இவருக்கும் கூட அது தான் பிடிக்குமாம் .சின்னத்தம்பி சீரியல் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். இதுவும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
இப்போ பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அந்த சீரியலில் இவர் வீட்டுக்கு மூத்த மருமகளாக இருந்தாலும் இவர் தான் அந்த சீரியல் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார்.

 ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

சில ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் சில ரசிகர்கள் இவருடைய நடிப்பு திறமையை பார்த்து பாராட்டுகிறார்கள் .இவர் வெளியே எங்கே சென்றாலும் இவர் நடிக்கும் சீரியல்களின் பெயரை சொல்லி தான் இவரை எல்லோரும் கூப்பிடுகிறார்கள் .சில நேரங்களில் இவருக்கு இது சந்தோஷமாக இருந்தாலும் சில ரசிகர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று சங்கடமாகி விடுமாம்.

 சூப்பர் அம்மா

சூப்பர் அம்மா

சீரியல்களில்இவருடைய கேரக்டர் பற்றி பேசும் போது இவருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது இருந்தாலும் சிரித்துக் கொண்டு வந்து விடுவாராம். இவருக்கு திருமணமாகி ஒரு பையனும் இருக்கிறார். பையனும் இவரும் சேர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவரை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு ஷாக் ஆகி விட்டார்கள். உங்களுக்கு இவ்வளவு ஒரு பெரிய பையன் இருக்கிறானா என்று.

 கிருத்திகாவின் மகன்

கிருத்திகாவின் மகன்

இவங்களை இவங்க அம்மா வளர்த்தது போல இப்போ இவங்களோட பையனையும் அவங்க அம்மா தான் முழுசாக கவனித்துக் கொள்கிறார். இவர் இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அம்மாவே அவரை கவனித்துக் கொள்கிறார். இப்போ சீரியல் படப்பிடிப்புகள் ஆரம்பித்த நிலையில் மறுபடியும் பிஸியாக நடித்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார் .

 டிக்டாக்கில் கலக்கல்

டிக்டாக்கில் கலக்கல்

கிடைக்கும் நேரங்களில் டிக்டாக் எடுத்து தள்ளுவதில் இவர் கைதேர்ந்தவர் .இவருடைய டிக் டாக் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வந்தது .ஆனால் தற்போது டிக் டாக் தடை செய்யப்பட்டதால் போட்டோ ஷூட்டில் இறங்கியிருக்கிறார். விதவிதமாக அணிகலன்களை அணிந்து போட்டோஸ்கள் போடுவதில் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அது போல இப்போ கருப்பு நிற ஆடையில் கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

 க்யூட் அழகு

க்யூட் அழகு

கல்யாண பொண்ணு போல மேக்கப் போட்டுக்கிட்டு எந்த ஒரு பெண்ணுக்கும் நகைகளை விடவும் வெட்கம் தான் அழகு என்று ஒரு போட்டோ இணையதளத்தில் போட்டிருக்கிறார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள் சில நெட்டிசன்கள் தங்களுக்கு உரிய குறும்புடன் இவரை கலாய்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+