ரூ.5 லட்சம் போச்சே.. குமரிமுத்து சொன்ன வார்த்தை.. அவரால் மட்டுமே அது சாத்தியம்: நெகிழ்ந்த வி. சேகர்
சென்னை: யாரையுமே திட்டாமல் மேடையில் ஒருவரால் பேச முடியும் என்றால் அது குமரிமுத்துவால் மட்டுமே சாத்தியம் என்று பாராட்டி சொல்லி உள்ளார் பிரபல டைரக்டர் வி.சேகர். தனக்கும், குமரிமுத்துவுக்குமான தொடர்பு பற்றியும் விவரித்து சொல்லி உள்ளார் வி.சேகர்.
IndiaGlitz யூடியூப் சேனலுக்கு, டைரக்டர் வி.சேகர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் சிவாஜி, மனோரமா உள்ளிட்டவர்களை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கெல்லாம் பதிலளித்துள்ள வி.சேகர், சிவகார்த்திகேயன், மறைந்த பழம்பெரும் நடிகர் குமரிமுத்து பற்றியும் கூறியிருக்கிறார்.

"நான் தீவிரமான முருகன் பக்தர்.. என்னுடைய 15 படமும் பழனி கோயில் படிக்கட்டில் உட்கார்ந்துதான் எழுதியிருக்கிறேன்.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த பழனியில் அப்போதிருந்தே இருக்கு,.. ஆண்டுதோறும் இந்த விழாவில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வேன்.. இந்த பெயரைதான் சிவகார்த்திகேயன் படத்துக்கு வெச்சாங்க.
சிவகார்த்திகேயன்: நான் அடுத்து ஒரு படம் எடுத்தால், அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன்.. காரணம், அந்த வட்டாரத்தை சேர்ந்தவர், நல்லா நடிக்கிறார்.. ஆனால், அதுக்குள்ள சிவகார்த்திகேயன் வேற லெவலுக்கு போயிட்டாரு. எனக்கும் பல பிரச்சனைகள், சிக்கல்கள் வந்துவிட்டன.
குமரிமுத்துவை பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் ஒரு பெஸ்ட் மனிதர். அவரும் டிராமா ஆர்டிஸ்ட். ரொம்ப பாலிடிக்ஸ் இல்லாத மனிதர்.. யதார்த்தமா இருக்காருன்னு அவரை பல படங்கள்ல நடிக்க வச்சேன். ஒரு தடவை பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் படத்துல, மலேசியாவுல ஒரு புரோக்கிராமுக்காக 2 நாள் பர்மிஷன் வாங்கிட்டு போனாரு. ரொம்ப நாள் முன்னாடி பிளான் இது.. பிளைட் டிக்கெட்டும் முன்னாடியே போட்டாச்சுன்னு சொன்னார். நானும் சரின்னுட்டேன்..
கிளைமேக்ஸ்: நான் பட்ஜெட்ல படம் எடுக்குறவன். அதுக்கு அப்புறம் பார்த்தா இவர் வரல.. முக்கியமான கிளைமாக்ஸ் சீனில் இவர் இருக்கணும். அங்க அவரோட பாஸ்போர்ட்டை மிஸ் பண்ணிட்டாரு. அவரு வராததால, அவருடன் நடிக்க வேண்டிய காம்பினேஷன் எல்லாமே நின்னுடுச்சு.. உடனே மழை சீசனும் வந்துருச்சு. இதனால் எங்களுக்கு 5 லட்சம் லாஸ் ஆயிடுச்சு.
அதுக்கப்பறம் என்னிட்ட ஓடிவந்து, "பாஸ்போர்ட் மிஸ் ஆச்சு, என்னால உடனே வர முடியல... சூழ்நிலை அந்த மாதிரி ஆகிப்போச்சு"ன்னு சொன்னாரு.. இதுக்காக ரொம்ப வருத்தப்பட்டார். அதுக்கு அப்புறம் அவர் என்னிடம், "உங்க படத்துல நான் இருக்கணும். நீங்க என்ன கொடுத்தாலும் சரிதான். ஏன்னா நான் லாஸ் பண்ணிட்டேனே"ன்னு சொன்னார்.
முக்கியமான நபர்: அப்போதிருந்து பெரும்பாலும் எல்லா படத்துலயும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவு நாள் டேட்களையும் தருவாரு.. ரொம்ப நல்ல மனிதர்.. யாரையுமே திட்டாமல் மேடையில் போய் பேசுவாரு.. திமுகவுலயே இருந்தாரு. ஆனா எதிர்க்கட்சியைக் கேவலமா திட்ட மாட்டாரு. திட்டாமல் பேசுவதில் மிக முக்கியமான நபர்.. இது அவரால மட்டும்தான் முடியும்' என்றெல்லாம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார் வி.சேகர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications