பரபர லட்சுமி ஸ்டோர்ஸ்... சுறுசுறு குஷ்பூ ... நறநற சுதா சந்திரன்!
Recommended Video

சென்னை: சன் டிவியுடன் சேர்ந்து குஷ்பூ தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து ஒளிபரப்பாகும் சீரியல் லட்சுமி ஸ்டோர்ஸ். முதலில் நந்தினி சீரியலும் இப்படித்தான் தயாரித்து இருந்தார்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் வேகம் கம்மியாக இருந்தது. குஷ்பூவின் நாத்தனாராக நடித்த நந்திதா வந்த வேகத்துல கழண்டுக்கிட்டாங்க. இப்படி மைனஸ் நிலையில இருந்த சீரியல் எந்த விதத்துல பிளஸ் ஆகப் போகுதுன்னு பலரும் நினைச்ச நேரம்.
திடீர்னு சுதா சந்திரன் கதாபாத்திரம் சகுந்தலா தேவி எம். எல் ஏவாக என்ட்ரி. அரசியல் சார்ந்து வேகமாகப் போகலாம் என்று எதிர்பார்ப்பும் இப்போது எழுந்துள்ளது.

நல்ல நடிகை
இந்த சீரியலில் சன்டிவியின் அழகிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் நட்சத்திரா நடிச்சிருக்கார். சில வருடங்களாகவே இவரை சீக்கிரம் நடிக்க கூப்பிட்ருவாங்கன்னு ஆடியன்ஸ் (பாய்ஸ்தான்) பேசிகிட்டு இருந்த நிலையில இந்த சீரியலில் நடிக்க இப்போதான் வாய்ப்பு கிடைச்சுருக்கு நட்சத்திராவுக்கு. அழகா இருக்கறது மட்டுமில்லைங்க, நடிப்பிலும் பிண்றார். பதநீர்னு நினைச்சு இவர் கள்ளு குடிச்சுட்டு பண்ணின லூட்டியே சாட்சி

பட்டர் பிஸ்கட்
பஞ்சுமிட்டாய் பாக்கிய லட்சுமி, பட்டர் பிஸ்கட் ரவி இவர்களுக்குள் காதல் இருந்தாலும், இல்லாத மாதிரி பாக்கிய லட்சுமி நடிப்பது என்று ஊடலாக செல்லும் காதல் உண்மையாக மாறுமா என்கிற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சரியான ரோல்
குஷ்பூ மனதில் பட்டததை கூறி சர்ச்சையில் மாட்டிக்கறதுல நம்பர் ஒன். இருந்தாலும், அவரின் அந்த குணத்தை அவர் மாத்திகிட்டது இல்லை. மிகவும் தைரிய சாலி, ஆனா பாருங்க இவர் நடிச்ச சீரியல்ல இவரின் நிஜமான குணத்தையும், அழகிய குஷ்பூவையும் பார்க்க முடியலை. லட்சுமி ஸ்டோர்ஸ்ல குஷ்பூ அழகா இருக்காங்க. அவங்களுக்குத் தகுந்த மாதிரி, அநியாயத்தை தட்டிக் கேட்கும் ரோல்.

சுதா சந்திரன்
குஷ்பூ, சுதா சந்திரன் மோதிக் கொள்ளும் காட்சிகள் அநியாயத்தை தட்டிக் கேட்கும் பெண், மிரட்டும் வில்லியாக அரசியல்வாதி பெண் என்று, பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருக்கிறது.
மிகவும் அழகிய குஷ்பூவை, இப்படியே காமிக்கணும்... வயசான கெட-அப் னு ரூட்டை மாத்திறாதீங்கப்பா...
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications