மச்சானுடன் மொரீஷியஸில்.. குஷ்புவின் மலரும் நினைவுகள்.. கண் வலியை மறந்த ரசிகர்கள்!
சென்னை: 80ஸ் ஹிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை குஷ்பு தற்போதும் சீரியல்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல அவர் உடல் மெலிவதிலும் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி உடல் மெலிந்த போட்டோக்களைப் போட்டு வைரலாக்கினார். அத்தனை பேரும் அடடா குஷ்புவா இது.. என்னம்மா இப்படி கலக்கறீங்களே என்று வாய் மீது விரல் வைத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் இத்தனைக்கும் திருஷ்டி போல வந்திருக்கிறது அவரது கண்ணில் நடந்த ஆபரேஷன். வலது அடிபட்டு கண்ணில் கட்டுப்போட்டு ஓய்வெடுத்து வருகிறார் குஷ்பு.

குஷ்பு செம பிசி
பொதுவாகவே பல நடிகைகள் சினிமாக்களில் கலக்கி விட்டு தற்போது சீரியல்களிலும் ரெக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குஷ்பு குறித்து சொல்லவே வேண்டாம். அவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்காக கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தற்போது அது கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது என்று சொல்லுமளவிற்கு இவருக்கு ரசிகர்கள் வட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.

குடும்பக் குத்துவிளக்கு
சினிமாக்களில் கலக்கி கொண்டிருந்தது போல சீரியல்களிலும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இவர். பல பெண்களின் ரோல் மாடலாக இருக்கிறார். இவர் அரசியல் பக்கம் போனாலும் நடிப்புன்னு வந்தா ஒரு கை பார்க்காமல் விடமாட்டார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, அரசியல்வாதி அப்படி பல முகங்கள் இவருக்கு இருந்தாலும் இவருக்கு நடிப்பு தான் ரொம்பவும் பிடித்ததாம்.

சீரியல்களில் பிசி
பல சீரியல்களை இவரே தயாரித்து இருந்தார். இவரும் அந்த சீரியலில் தோன்றினால்தான் ஒரு மனநிறைவு ஏற்படும். அந்த வகையில்தான் அவரது கணவர் தயாரிக்கும் சீரியல்களில் இவர் கட்டாயம் ஒரு சீனுக்கு வந்து கலக்கி விடுகிறார். இந்த மாதிரி பிசியாக போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் இந்த ஊரடங்கு வந்ததும் தலைகீழா மாறி விட்டதாம். சூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே இருந்து வேலை செய்து கொண்டு இருந்த குஷ்பு தற்போது ஒல்லியா சிக்குன்னு மாறிவிட்டார்.

ஒல்லியான குஷ்பு
இவரை பார்த்து பல நடிகர்களும் உடல் எடை குறைப்புக்கு போட்டி போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது சூட்டிங் எல்லாம் ஆரம்பித்திருந்தாலும் இவர் சூட்டிங்க்கு செல்லாமல் வீட்டில் தான் இருக்கிறார். இந்த நிலையில் இவரது இவர் காரை எடுத்துக் கொண்டு ஜாலியாக வெளியே கிளம்பின மாதிரி அதுவும் மாஸ்க் அணிந்து போற மாதிரி ஒரு போட்டோ இணையதளத்தில் போட்டிருக்கிறார். அந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தோழி கொடுத்த சூப்பர் மாஸ்க்
இன்ஸ்டாகிராமில் இந்த மாஸ்க் வெட்டிவேரால் செய்தது என்றும் இதனை அளித்த பூர்ணிமா விற்கு நன்றி என்றும் கூறியிருக்கிறார். இவரும் நடிகை பூர்ணிமா பாக்யராஜும் நல்ல தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரிந்தது. ஆனால் பூர்ணிமா பாக்யராஜ் தானே தன் கையால் செய்த மாஸ்க்கை இவருக்கு பரிசாக வழங்கி இருக்கிறாராம். அதனை போட்டுக்கொண்டு நான் வெளியே பாதுகாப்பாக செல்கிறேன் என்று போஸ்ட் போட்டிருக்கிறார் குஷ்பு.

கணவருடன் ஹேப்பி போஸ்
இந்த நிலையில், சமீபத்தில் நீச்சல் குளத்தின் அருகில் இவரும் இவரது கணவர் சுந்தர் சியும் ஜோடியாக போஸ் கொடுத்த போட்டோ போட்டிருந்தார். பழைய போட்டோதான். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் இவர்களை புகழ்ந்து தள்ளுகிறார்கள். எண்ணமும் 16 வயது போல தான் இருவரும் இருக்கிறீர்கள். உங்கள் காதல் என்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை.

மீண்டும் வரட்டும் பொற்காலம்
நீங்கள் இப்படியே பல வருடங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கமெண்டுகளை போட்டு தள்ளியிருக்கிறார்கள். இவருடைய ரசிகர்கள் இவரை திரையில் எப்போது பார்ப்போம் என்று ஆவலாக காத்திருக்கும் நிலையில் இந்த மாதிரி போஸ்ட் போட்டது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக தான் இருக்கிறது என்று பல ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications