குஸ்தி பிடிக்காத மகன் மாயனை இப்படி அழ வைக்கிறாரே...ஐயோ பாவம்!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் அப்பா அம்மாவுக்கு 60 ம் கல்யாணம் நடக்குது.
மாயன், அரவிந்த்னு குஸ்தி வாத்தியாருக்கு இரட்டை பிள்ளைகள். இதில் அரவிந்த் குஸ்தியின் நண்பர் வீட்டில் வளர்ந்து டாக்டராயிடறான்.
மாயன் விளையாட்டு பிள்ளையா ரவுடியான்னு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கான்.இவனை அப்பா குஸ்திக்கு பிடிக்காதுன்னு மாயன் நினைச்சுகிட்டு இருக்கான்.

அறுபாதாம் கல்யாணம்
அப்பா அம்மா அறுபதாம் கல்யாணத்துக்கு மாயனை இன்வைட் பன்றாரு அப்பா குஸ்தி. இன்னும் சேர்ந்து வாழாத பொண்டாட்டி தேவியோடதான் கல்யாணத்துக்கு வரணும்னு கண்டிஷன் போட்டுட்டும் வந்துடறார்.

பொண்டாட்டி தேவி
தேவியின் வீட்டில் அறுபதாம் கல்யாணத்துக்கு போகக் கூடாதுன்னு தேவியின் அம்மா சொல்லிடறாங்க. ஆனாலும் மாயன் தன் அப்பா வாங்கிக் கொடுத்த புடவை வேஷ்டி சட்டையை கொடுத்து, தேவியிடம் கல்யாணத்துக்கு மட்டும் என்கூட வந்துருங்கன்னு கெஞ்சறான்.

ஆசைதான் தேவிக்கும்
தேவிக்கும் மாமனார் மாமியாரின் அறுபதாம் கல்யாணத்துக்கு போக ஆசைதான்..கிளம்பலாம்னு பார்க்கறப்போ கம்பெனியில இன்கம்டேக்ஸ் ரெய்டுன்னு சொல்றாங்க.போக முடியாம தவிக்கறா.

தம்பி அழைச்சுக்கிட்டு
அரவிந்த் வந்து மாயனை மட்டும் பிடிவாதமா அழைச்சுட்டு வர்றான்.அப்பவும் ரொம்ப கெத்தா வர்றான். அப்பா அம்மாவை ஆசீர்வாதம் செய்வது போல செய்து ,அப்படி சொல்லி என்னை வாழ்த்துங்கன்னு அலப்பறை பன்றான். செந்தில் நடிப்பு அபாரம்....ரசிக்க வைக்கிறார்.

ஃபீலிங்ஸ் தனியா
தனியா உட்கார்ந்து தேவி இப்படி பண்ணிட்டாளேன்னு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கான். அப்போது குஸ்தி வந்து.. என்னடா... உன்னைய நம்பி அவ மட்டும்தான் சுத்திகிட்டு இருந்தா...அவளும் உன்னைய கை விட்டுட்டாளாண்ணு கேட்க... மாயன் மனசு தாளாமல் அழ ஆரம்பிக்கறான்.

உனக்கு தேவிதான்
என்னடா அழறியா... எதுக்கு அழறே.. நீ அழக்கூடாதுடா..உன்னை மனுஷனாக்கியவ தேவி..அவ அடிச்சாலும் ,நீ வாங்கிக்கத்தான் செய்யணும். உனக்கு தேவிதான் பொருத்தமானவன்னு சொல்றார். மாயன் எப்படா வாய்ப்பு கிடைக்கும்னு காத்திருந்தவன் போல அப்பாவை கட்டிக்கிட்டு அழறான்.பார்க்க பாவமா இருக்கு.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications