நான் கிறிஸ்தவ பொண்ணு! அந்த அம்மன் தான் என்னை பாட வைத்தது! புண்ணியம் இருக்கு! எல்.ஆர் ஈஸ்வரி உருக்கம்
சென்னை: தமிழ் திரையுலகில், 1960 மற்றும் 70களில், தனது கணீரென்ற குரலால், கோலோச்சிய, பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, தற்போது, தனது 85-வது வயதிலும், இளமை குன்றாத, இசையரசியாக, ரசிகர்களின் மனதில், நீங்காத இடம் பிடித்துள்ளார். சமீபத்தில், ஒரு யூடியூப் நேர்காணலில், அவர், அம்மன் பாடல்கள் குறித்து, மனம் திறந்து பேசியது, ரசிகர்களை, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசைப் பயணத்தின் தொடக்கம்
சிலருடைய பாடல்கள் கேட்கும் போது கடவுள் பரிசம் கிடைத்தது போல ஒரு உணர்வு தோன்றும். அதுபோலத்தான் எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல்கள் கேட்பவர்களில் மனதை பக்தி மயமாக மாற்றிவிடும். லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற இயற்பெயருடன், அடியெடுத்து வைத்த இவர், தனது தனித்துவமான குரலை, அடையாளம் கண்ட, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், இவருக்கு, திரையிசை பயணத்தைத், துவக்கி வைத்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், 'பாச மலர்' படத்தில், இவர் பாடிய, 'வாராயோ தோழி வாராயோ' பாடல், இவருக்கு, ஒரு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது.
பன்மொழி பாடகி
அதைத் தொடர்ந்து, தனித்தும், இணைந்தும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என, பல மொழிகளில், கொடிகட்டிப் பறந்தார், எல்.ஆர்.ஈஸ்வரி. 'காதோடுதான் நான் பாடுவேன்' என்று, மென்மையாகப் பாடும் அதே குரல்தான், 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' என்று, அலட்டலாகவும், அதிரடியாகவும், பாடி, அசத்தியது. 'அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்' என, சமூகத்தின் அவலங்களை, கம்பீரமாக, உரத்துக் காட்டியது.
யேசுதாஸுடன் இணைந்து
'மன்மத லீலை' படத்தில் வரும், 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலில், இணைந்து பாடிய, யேசுதாஸின் மென்மையான குரலிற்கேற்பவும், பாடி, தனது தனித்துவத்தை, நிரூபித்தார். இசைவாணியாக, கொடிகட்டிப் பறந்த, பி.சுசீலாவுடன், இணைந்து, இவர் பாடிய, 'கட்டோடு குழலாட ஆட', 'அடி போடி பைத்தியக்காரி', 'உனது மலர்க்கொடியிலே எனது மலர் மடியிலே' போன்ற பல பாடல்கள், நட்பின் வெவ்வேறு மனநிலையின் வடிவங்களாக, மனம் நெகிழ வைத்தன.
அம்மன் பாடல்களும், பக்தியும்
சமீபத்தில், ஒரு யூடியூப் பேட்டியில், பேசிய எல்.ஆர்.ஈஸ்வரி, "நான் ஒரு கிறிஸ்டியன். ஆனால், எனக்கு, அம்மன் பாடல் பாடுவதற்கு, அருள் கிடைத்திருக்கிறது, என்றால், அது, நான் செய்த, புண்ணியம் என்றுதான், நினைக்கிறேன். நான், பிறந்ததே, கடவுள் கொடுத்த, பரிசு என்று, நினைக்கிறேன். அந்தக் கடவுள், அருள் இல்லை என்றால், என்னால், இந்த அளவிற்கு, பெயர் வாங்கி இருக்க முடியுமா என்று, எனக்குத் தெரியவில்லை," என்று, நெகிழ்ச்சியுடன், கூறினார்.
ஆடி மாதம்
"ஆடி மாசம் வந்து விட்டாலே, 'எல்.ஆர்.ஈஸ்வரி மாதம்', என்று, பலர், சொல்கிறார்கள். இது, அம்மன் அருள் இல்லாமல், நடக்குமா?" என்று, கேள்வி எழுப்பி, தனது, பக்தியை, வெளிப்படுத்தினார். கணக்கில்லாத திரைப்பாடல்கள் மட்டுமல்ல, 'கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா... செல்ல மாரியாத்தா' போன்ற, அவர் பாடிய பக்திப் பாடல்கள், இப்போதும், எண்ணற்ற, பாமர மக்களின், உள்ளத்தைக் கவர்ந்த, பக்திப் பாடல்களாக, திகழ்கின்றன.
தலைமுறைகள் கடந்தும், தனது இசைப் பயணத்தைத், தொடர்ந்து வரும், எல்.ஆர்.ஈஸ்வரி, தனது, அற்புதமான குரலால், என்றும், நம் காதுகளிலும், மனங்களிலும், நிறைந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications