காடை பிரியாணி கேட்ட "மிரட்டல் நாயகன்" எங்கே? நயன்தாராவை யாருமே லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லல: பிரபலம்
சென்னை: "தன்னுடைய 75 வயசிலும் கரீஷ்மாவுடன் ரஜினிகாந்த் இன்னமும் ஸ்பிரிட் குறையாமல் நடித்து வருகிறார்.. மக்கள் இன்னமும் அவரை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா இதுவரை என்ன பங்களித்திருக்கிறார்? ரஜினிபோல 75 வயசுல நயன்தாரா நடிக்கட்டும்.. அப்போது ரசிகர்கள் அவரை "லேடி சூப்பர் ஸ்டார்"னு சொல்லட்டும்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
தன்னை இனிமேல் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம், என்று நயன்தாரா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, Media Circle சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "லேடி சூப்பர் ஸ்டார்னு எனக்கு சொல்லுங்க என்று நயன்தாராவே வாய் திறந்து கேட்கிறார்.. படம் அக்ரிமென்ட்டிலேயே இதை சொல்லிவிடுகிறார்.. ரஜினிகாந்த்துடன் "அண்ணாத்தே" படம் நடிக்கும்போதும், டைட்டிலில் "லேடி சூப்பர் ஸ்டார்" பட்டம் போடணும்னு சன் பிக்சர்ஸ் கிட்ட நயன்தாரா சொன்னாங்க.
அண்ணாத்தே பிரஷர்
ஆனால் சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த தவிர வேறு யாருக்கும் நாங்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் போட முடியாது என்றார்கள். உடனே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், சிறுத்தை சிவாவுக்கு அழுத்தம் தர ஆரம்பிச்சாங்க.. அண்ணாத்தே படம் தோல்விக்கு காரணமே, இவங்க 2 பேரும் சேர்ந்து இயக்குனருக்கு தந்த அழுத்தம்தான். டைரக்டரை விரட்டி விரட்டி, அவரை படம் சம்பந்தமாக யோசிக்கக்கூட விடல, அவரால் கதையிலும் கவனம் செலுத்த முடியல.
இதனால் வேற வழியில்லாமல் ரஜினிக்கு போன் செய்து, "லேடி சூப்பர் ஸ்டார்னு நயன்தாரா போட சொல்றாங்க" என்று சொன்னதுமே, உடனே ரஜினி கேஷூவலாக "ஓகே" சொல்லிவிட்டார். காரணம், அவருக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.. தனக்கு தரப்பட்ட சூப்பர் ஸ்டார் பட்டத்தையே வேணாம்னு சொன்னவர் ரஜினி.. ஆனால், மக்களே அவரை கொண்டாடி தரப்பட்ட பட்டம்தான் சூப்பர் ஸ்டார் பட்டமாகும். இதுதான் உண்மையான பட்டம்.
காணாமல் போன ஹீரோ
காணாமல் போன ஜீவன் என்ற நடிகரும் இப்படித்தான். நாங்கள் "தோட்டா" என்ற படத்தை அவரை வைத்து எடுத்தோம். ஏற்கனவே 10 ரெட் புல், காடை பிரியாணி, கவுதாரி பிரியாணி, காஸ்ட்லி கேரவன் இவ்வளவு வசதிகள் அவருக்கு செய்து தந்தும், தனக்கென்று பட்டம் வேண்டும் என்று கேட்டார். அதுவும் "மிரட்டல் நாயகன்" என்ற பட்டத்தை தனக்கு டைட்டிலில் போட சொன்னார். திருட்டு பயல், நான் அவன் இல்லை என்ற 2 படங்கள் மட்டும் நடித்துவிட்டு, எப்படி இவருக்கு "மிரட்டல் நாயகன்" பட்டத்தை தருவது?
மிரட்டல் நாயகன் பட்டம் போட முடியாது என்று நாங்கள் கறாராக சொல்லிவிட்டோம். உடனே நடிகர் சங்கத்திடம் இந்த புகாரை கொண்டு போனார். நடிகர் சங்கத்திலிருந்து எங்களுக்கு போன் வருது, "சார், மிரட்டல் நாயகன் என்று அவருக்கு பட்டம் போட்டு விட்ருங்க" என்று கேட்கிறார்கள்.
மிரட்டல் நாயகன் எங்கே
இவரெல்லாம் மிரட்டல் நாயகன் என்றால், இப்போது எங்கு போய் யாரை அவர் மிரட்டி கொண்டிருக்கிறார்? பட்டம் வைக்க ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. 80களின் இறுதி, மற்றும் 90களின் ஆரம்ப கட்டத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ், பூவொன்று புயலானது என்று விஜயசாந்தி ஆக்ஷன் படங்களில் நடித்தார். உண்மையிலேயே ரிஸ்க் எடுத்து நடித்தார்..
ஒரு ஆண் என்னென்ன ரிஸ்க் எடுப்பாரோ, அத்தனை ரிஸ்க்கையும் விஜயசாந்தி எடுத்தார்.. 80 அடி கயிற்றில் தொங்குவார், கட்டிடத்துக்கு கட்டிடம் தாண்ட சொன்னாலும் தாண்டுவார்.. இதனால், ரசிகர்களே அவருக்கு லேடிசூப்பர் ஸ்டார் பட்டத்தை தந்தார்கள். ஆனாலும் அந்த பட்டத்தை விஜயசாந்தி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. விஜயசாந்தி போல, எந்த படத்தில் நயன்தாரா ரிஸ்க் எடுத்தார்?
முதல்ல 75 வயசுல நயன்தாரா நடிக்கட்டும்
75 வயசிலும் கரீஷ்மாவுடன் ரஜினி இன்னமும் ஸ்பிரிட் குறையாமல் நடித்து வருகிறார்.. மக்கள் இன்னமும் அவரை கொண்டாடுகிறார்கள்.. ஆனால், நயன்தாரா என்ன பங்களித்திருக்கிறார்? ரஜினிபோல 75 வயசுல நயன்தாரா நடிக்கட்டும்.. அப்போது ரசிகர்கள் அவரை லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லட்டும்.
யாருமே தராத பட்டத்தை, இவங்களே உருவாக்கி, இவங்களே டைரக்டர்களுக்கு அழுத்தம் தந்து படங்களில் போட வைத்துவிட்டால், பட்டம் அவர்களுக்கு கிடைத்துவிடுமா? உண்மையை சொல்லப்போனால், லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாராவை யாருமே ஏத்துக்கல, யாருமே ஒத்துக்கல. மக்களும் அவரை கொண்டாடல" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications