Lakshmi Stores Serial: தாலியை கழட்டு... தாலியை கழட்டு.. இப்படி ஜவ்வா இழுத்தா எப்படிப்பா!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பணக்கார வீட்டு பையன் ரவியும், ஏழைப் பெண் பாக்கிய லட்சுமியும் காதலிக்கிறார்கள். பாக்கியலட்சுமி தாத்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் ரவியின் காதலை ஏற்க மறுக்கிறாள்.
கடற்கரையில் இருவரும் முக்கியமாக பேசிக்கொண்டு இருக்கும்போது, ரவுடிக் கும்பல் வருது. நீங்க லவ்வர்ஸ்னா தாலி கட்டுங்கன்னு மிரட்டறாங்க. மஞ்சள் கயிற்றில் மஞ்சளை கட்டி கையில் வைத்துக்கொண்டு.
இல்லை என்று சொன்னாலும் நம்பவில்லை. அப்டீன்னா அவனை நீ அண்ணன்னு கூப்பிடு, நீ அவளை தங்கச்சின்னு கூப்பிடுன்னு சொல்லியும் மிரட்டறாங்க. இவர்கள் ஒன்றுமே பேசாமல் நிற்க, கடைசியில் ரவுடி ஒருவன் பாக்கியலட்சுமி கழுத்தில் தாலி கட்ட வருகிறான்.

ரவி தாலி
பாக்கியலட்சுமி கழுத்தில் தாலி கட்டிவிடுகிறான் ரவி. பாக்கியலட்சுமி அழுகிறாள். உனக்கு பிடிக்கலேன்னா அந்த தாலியை கழட்டிடுன்னு சொல்றான் ரவி. இல்லை ரவி, உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும். இந்த தாலியை நான் கழட்ட மாட்டேன்னு சொல்லி விடுகிறாள். இங்கு ஆரம்பிக்குதுங்க தொல்லை.

பெண்ணை பேசி
ரவிக்கு அவனின் அண்ணன் தேவராஜ், மினிஸ்டர் சகுந்தலா தேவியின் பெண்ணை பேசி முடிக்கிறார். ஆனால்,அதற்குள் மினிஸ்டரின் பெண் தேஜா, அவளின் தாய் மாமன் இருவருக்கும் ரவி பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டிய விஷயம் தெரிந்து விடுகிறது.

தாய்மாமன் தேஜா
தேஜாவின் தாய்மாமனும், மினிஸ்டரின் தம்பியான ராஜுவும், தேஜாவும் சேர்ந்து,பாக்கியலட்சுமியை கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைச்சு, விருந்து வச்சு தாலியை கழட்ட சொல்றாங்க. அதுவும் இப்பவே கழட்ட கூடாதாம். வெள்ளிக்கு கிழமை பார்த்து கழட்டி வைக்க வேண்டுமாம். சென்டிமென்ட் இல்லாமல் கட்டிய தாலியை கழட்ட சொல்றாங்க. ஆனாலும் வெள்ளிக் கிழமை சென்டிமென்ட் பார்க்கறாங்க.

தங்கை பாக்கியலட்சுமி
ராஜு தங்கை பாக்கியலட்சுமியை கடத்தி வச்சுக்கிட்டு, ஒரு இடத்துக்கு வர சொல்றான். அவனே மாறு வேஷத்தில் ஆட்டோ டிரைவராக வந்து, பாதி வழியில் அவளை இறக்கிவிட்டு, உன் தங்கச்சி உயிரோட இருக்கணும்னா தாலியை கழட்டுன்னு மிரட்டறான். தாலி தாலி தாலின்னு நமக்கு எரிச்சலை கிளப்பி உயிரை வாங்கறாங்க. கழட்டி எடுத்துக்கிட்டு போவானா.. .இதையே எத்தனை எபிசோட் பார்க்கறது. இப்படி போனால் ஒரு எபிசோடுக்கு ஒரு மணி நேரம் கூட பத்தாதுதான்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications