மடியில் கை வச்சா உதைக்கும்...மத்தபடி லட்சுமி சாஃப்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி, லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சன் டிவியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி இது.

கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியில், சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். இதில் ஒரு வாரம் கிராமத்துக்கு சென்று மாடுகளை கழுவி அலங்கரிக்க வேண்டும். மாட்டு உரிமையாளரிடம் பேசி, மாட்டை குளிப்பாட்டி அலங்கரிக்க அனுமதி பெறுவது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறவர்களின் திறமை.

நடிகை சஞ்சனா சிங், கிராமத்தில் அப்படி ஒரு வீட்டுக்கு சென்று, மாட்டின் உரிமைகார அம்மா மாட்டை பிடிச்சு, இது லட்சுமி...மடியில் கை வச்சா மட்டும்தான் உதைக்கும்னு சொல்லி சஞ்சனா சிங் கையில் கொடுக்க, சஞ்சனா மாட்டை குளிப்பாட்டி அழகு படுத்தினார்.

 கிராமத்தில் ஒரு நாள்

கிராமத்தில் ஒரு நாள்

கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி, பெரும்பாலும் நகரத்தில் வாழ்ந்தே பழக்கப்பட்ட நடிகைகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். விரும்பக் கூடிய அனுபவமாகவும் இருக்கும்..நடிகைகள் அழகாக படு கிளாமராக உடை அணிந்துக்கொண்டு கிராமத்தில் வலம் வருவதை அந்த ஊர் மக்கள் அவ்வளவாக வேடிக்கை பார்ப்பதில்லை.. அப்படியே பார்த்தாலும் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல யாரும் கண்டுக்கொள்வதில்லை.

 நடிகை சஞ்சனாசிங்

நடிகை சஞ்சனாசிங்

ரேணிகுண்டா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சஞ்சனா சிங் இந்த படத்தை தொடர்ந்து சஞ்சனா இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். ரேணிகுண்டா படத்திற்கு பின்னர் கோ மயங்கினேன் தயங்கினேன், அஞ்சான், தனி ஒருவன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

 டெல்லி பெண்

டெல்லி பெண்

அப்பா ராணுவத் துறையில் இருந்ததால், டெல்லியில் பிறந்த பெண் சஞ்சனா சிங். சென்னை, டெல்லி என்று மாறி மாறி இருக்கும் சஞ்சனா நன்றாக தமிழ் பேசும் நடிகை என்றாலும் தமிழ் சினிமா வாய்ப்புக்காக இன்னும் காத்து இருக்கிறார். படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நின்றாரோ இல்லையோ.. கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் அறியும் முகமாக மாறி இருக்கிறார்.

 மாட்டை குளிப்பாட்டி

மாட்டை குளிப்பாட்டி

ஒரு வீட்டில் மாட்டின் உரிமையாளர் அம்மா, இந்தம்மா இதுதான் லட்சுமி.. மடியைத் தொட்டா மட்டும்தான் உதைக்கும். மத்தபடி ரொம்ப சாஃப்ட்னு சொல்லி, சஞ்சனா கையில் கொடுத்தார். லட்சுமியை சஞ்சனா குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, குங்குமம் வைத்து, கழுத்துக்கு மாலை போட்டு அலங்கரித்தார். லட்சுமி லட்சுமிகரமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+