லட்சுமி.. அப்படின்னும் "குறுகுறு"ன்னு மனசுல வர்ற லட்சுமி பிரியா.. இப்ப என்ன பண்றாங்க தெரியுமா?
சென்னை: லட்சுமி குறும்படம் .. அப்படி சொன்னதுமே எல்லாருக்குமே தெரியும் . அவ்வளவு பேமஸ் ஆனவர் லக்ஷ்மி பிரியா. அந்தளவுக்கு இந்த குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தததோடு, பல சர்ச்சைகளையும் கூடவே சந்தித்தது .
யாரும் நடிக்க அச்சப்படிக்கிற சீன்களில் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் நடித்து ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார் லட்சுமி பிரியா. இயக்குனர் மகிழ் திருமேனியின் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி லட்சுமி பிரியா, தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழில் சுட்ட கதை என்ற படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார் லட்சுமி பிரியா. தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்துள்ள லட்சுமி பிரியா நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

சலசல காட்சிகள்
இவர் படங்களில் நடித்து பிரபலமானதவிட குறும்படங்களின் மூலம்தான் அதிகம் பிரபலமானார். லட்சுமி குறும்படத்தில் ரயிலில் அறிமுகமான புது நண்பருடன் சென்று அவரது அறையில் அவருடன் தங்குவது போன்ற கதையில் நடித்திருந்தார். தொடர்ந்து கணவருடன் படுக்கையறை காட்சிகளிலும் படு தைரியமாக நடித்திருப்பார் லட்சுமி. யூடியூபில் வெளிவந்த இந்த குறும்படம் அதிகம் வியூஸ் போனாலும் பெரும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

ஹாட் லட்சுமி
நியூஸ் களிலும் சமூக வலைத்தளங்களிலும் லக்ஷ்மி குறும்படத்தை வைத்துதான் அதிலும் இவருடைய நடிப்பை வைத்து தான் நிறைய மீம்ஸ்களும் போடப்பட்டன. பெரும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களை அந்தப்படம் உணர்த்தி உள்ளது என்று ஒரே வார்த்தையில் கூறினார். அதில் நான் நடிக்க மட்டும்தான் செய்துள்ளேன் என்றும் தைரியமாகவே சொன்னார்.

திருமணமாகி செட்டில்
அதன்பிறகு லக்ஷ்மி பிரியா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் தியேட்டர் நடிகருமான வெங்கட்ராகவன் சீனிவாசன் என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் சங்கீத் மெஹந்தி என கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஹாட் படங்கள்
திருமணத்திற்குப் பிறகும் லட்சுமி பிரியா நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் , ரஜிதா ,விஜயன் நடிக்கும் கர்ணன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இணையத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் லட்சுமி பிரியா இப்பொழுது ஹாட் போட்டோக்களை எடுத்து அப்லோட் பண்ணி இருக்கிறார். இந்த போட்டோஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
லட்சுமி பிரியாவா.. ரகளைப் பிரியாவா.. எப்படியோ ரசிகர்களுடன் இணைப்பில் இருந்தால் சரித்தான்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications