Lakshmi Stores Serial: பஞ்சுமிட்டாய் பாக்கியலட்சுமி வந்தாச்சு!
சென்னை: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் இறந்து போனதாக சொல்லப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கியலட்சுமி உயிரோட வந்தாச்சு. இத்தனை நாட்களாக அவர் இல்லாமல்தான் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சுந்தர் சி நிறுவனத்துக்கு சொந்தமான புரடக்ஷன் கம்பெனி தயாரிப்பு சீரியல். இந்த சீரியல் குறுகிய காலத்தில் சன் டிவியில் பெரு வாரியான ஆதரவைப் பெற்றது.
இந்த சீரியலில் லட்சுமியாக குஷ்பூவும், பாக்யலட்சுமியாக நடிகை நட்சத்திராவும் நடித்து வருகின்றனர். இதில் நடிகர் சுரேஷ் குஷ்பூவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சீரியலின் ஆரம்பத்திலிருந்தே காட்சியமைப்புகள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வந்தன.

பஞ்சுமிட்டாய் பட்டர்பிஸ்கட்
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நட்சத்திரா, உசேன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். சீரியலில் இவர்களின் காதல், ரொமான்ஸ் சீரியல் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.அதற்கு ஏற்ற மாதிரி நாளுக்கு நாள் பஞ்சுமிட்டாய் பாக்கியலட்சுமி, பட்டர் பிஸ்கட் ரவி என்று இவர்களின் ரொமான்ஸ் அளவில்லாமல் சென்றுகொண்டு இருந்தது.

கல்யாணம் கோவா
இருவருக்கும் கதைப்படி கல்யாணமும் ஆகி, ஹனிமூனுக்கு கோவா போனார்கள். அங்கும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ரொமான்ஸ் களைக்கட்டியது. ஆனால், கதைப்படி இவர்களை துரத்திச் சென்ற மினிஸ்டரின் தங்கை தேஜாவால் பாக்கியலட்சுமி உயிருக்கு ஆபத்து வந்து, அங்கேயே பாக்கியலட்சுமி இறந்து விட்டதாகவும் காண்பிக்கப்பட்டது.

கொலைப்பழி விழுந்தது
ரவி, லட்சுமி மீது மினிஸ்டர் தங்கை, தேஜா இருவரும் சேர்ந்து பாக்கியலட்சுமி கொலை செய்யப்பட்டாள், கொலை செய்தது லட்சுமியும், ரவியும் என்று பாக்யலட்சுமியின் அண்ணியை வைத்து போலீசில் புகார் அளிக்க வைத்தார்கள். போலீசும் இவர்களுக்கு உடந்தையாக இருக்க ரவி மீதும் லட்சுமி மீதும் கொலைப்பழி விழுந்துவிட்டது.

நேரில் ஆஜர்
ரவியையும், லட்சுமியையும் காப்பாற்ற திடீரென்று பாக்கியலட்சுமியாக நடித்து இருக்கும் நட்சத்திரா கோர்ட்டுக்கு நேரில் வந்து சாட்சி சொல்கிறாராம்.இதன் மூலம் நட்சத்திரா லட்சுமி ஸ்டோர்ஸில் மீண்டும் நடிப்பார் என்றே தெரிகிறது. நிறைய ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி, ரவி ரொமான்ஸ் இல்லாமல் போனது ஏமாற்றமாகவே இருந்தது.

போய் விடுவாரா
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நட்சத்திரா இல்லாமல் பலரும் அந்த சீரியலை பார்க்க விரும்பவில்லை என்று கூட ஒரு தகவல் பரவியது. எப்படியோ, சீரியலுக்கு உயிர் கொடுக்க நட்சத்திரா வந்துவிட்டார். சரி நிரந்தரமாக இருப்பாரா அல்லது மறுபடியும் பேக்கப் பண்ணி அனுப்பி வச்சுடுவாங்களான்னு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications