ஜுரத்தில் படுத்துடறான் ரவி.. துரத்தி விடறாளே உமா...!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் அடிக்கடி எதாவது திருப்பங்களுடன் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
ஒண்ணு குடும்பத்துல அதிரடி திருப்பங்கள், இல்லையா பாக்கியலட்சுமி, ரவி இடையே ஏற்படும் ரொமான்ஸ் திருப்பங்கள்.. அதுவும் இல்லையா பிசினெஸ் திருப்பங்கள்னு சுவாரஸ்யமா இருக்கு.

மினிஸ்டர் சகுந்தலா தேவி செய்த சதி வேலையால பாக்கியலட்சுமி, ரவி, டாக்டர் தம்பி எல்லாரும் ஜெயிலுக்கு போறாங்க. அப்போ காப்பாத்தி அழைச்சுட்டு வர்றாங்க மகாலட்சுமி.
பாக்கிய லட்சுமியை அவங்க அண்ணி, ஜெயிலுக்கு போயிட்டு வந்தவள்னு சொல்லி வீட்டுல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. மகாலட்சுமி தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறாங்க.
அப்போலேர்ந்து பாக்கியலட்சுமியை வீட்டை விட்டு விரட்ட, ரவியை ஒருதலையா காதலிக்கும் தேஜா கூட சேர்ந்து பல கெட்ட வேலைகள் செய்யறாங்க. அந்த வீட்டில் எல்லாருக்கும் பாக்கியலட்சுமியை பிடிச்சு இருந்தாலும், டாக்டர் பொண்ணு உமாவுக்கு மட்டும் பிடிக்கலை. அதுவும் தேஜா சொல்லிக் கொடுப்பதால்.

கடைசியா உமாவும், தேஜாவும் சேர்ந்து பாக்கிய லட்சுமிக்கு 10 நாளைக்கு கடுமையான ஜுரம் வர்ற மாதிரியான மாத்திரையை ஜூஸில் கலந்து குடுக்க முடிவு செய்யறாங்க.
டக்கர் பாப்பா உமா, கொஞ்சமும் மனசாட்சி இல்லாம மாத்திரையை நுணுக்கி ஜூஸில் கலந்து பாக்கிய லட்சுமிக்கு குடுக்க வச்சுடறாங்க. ஆனா, பாக்கிய லட்சுமி கிட்ட இது உனக்கான ஸ்பெஷல்னு ரவி குடுக்க, எந்த ஸ்பெஷலா இருந்தாலும் உங்களுக்குத்தான் ரவின்னு பாக்கிய லட்சுமி ரவிகிட்ட ஜூஸை கொடுத்ததை உமா பார்க்கலை..

தேஜாவுக்கு போன் செய்து, ஜூஸை குடுத்துட்டேன்னு குதூகலிக்கறா. கடைசியில ரவி குடிச்சுட்டு கடுமையான ஜுரத்துல கிடக்கான். அந்த சமயம் பார்த்து குஷ்பூக்கு தெரியாம உமா சொல்றாங்க..இங்க என்னடி அழுதுகிட்டு, அவன் காலை தேய்ச்சு விடறே..
நீ என்ன இந்த குடும்பத்து ஆளா.. வெளியே போடின்னு மெதுவா கடுப்புல பேசறாங்க உமா பாக்கியலட்சுமியைப் பார்த்து. அவ உடனே காலை தேய்ச்சு விடறதை நிறுத்திட்டு, எழுந்து நிற்க.. வெளியில போடின்னு மறுபடியும் அதட்டறாங்க. பாக்கியலட்சுமி அழுதுகிட்டே கேட்டுக்கு வெளியே நிக்கறா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications