lakshmi stores serial :குஷ்பூவை காணோம்... சுதாசந்திரன் போட்டோவில்... என்னடா கதைன்னு இருக்கு!
சென்னை: சன் டிவி குஷ்பூவின் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்ல பிரைம் ஸ்லாட்டை ஒதுக்கித் தந்தது. ஆனால், அதை நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறதா என்பது சரியாக தெரியவில்லை.
கதைக்கு முக்கியமான இருவர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சீரியல் எபிசோடுகளில் தலைக் காட்டவில்லை.
அழகிய குஷ்பூ, விதம் விதமான அழகு சேலைகள், அதற்கேற்ப நவீன அக்சஸரீஸ் என்று கலக்கி வந்த சுதாசந்திரன் கதைப்படி இறந்தே போய்விட்டார்.

மகாலட்சுமி குடும்பம்
பாக்கியலட்சுமி குடும்பம், மகாலட்சுமி குடும்பம் என்று மட்டுமே இப்போதைக்கு கதையைக் கொண்டு போகிறார்கள். பரவாயில்லை எனும்படி சுதா சந்திரனுக்கு பதிலாக தெய்வமகள் சீரியலில் காயத்ரியாக நடித்த ரேகாவை சகுந்தலா தேவியின் அதாவது சுதா சந்திரனின் தங்கையாக கொண்டு வந்து இருக்கிறார்கள்.

ஆபீசர் நந்தினி
கியூ பிரான்ச் ஆபீசர் என்று நந்தினி சீரியலில் நடித்த நித்யாவை நடிக்க வைத்து மக்களின் மனதை கொஞ்சம் டைவர்ட் செய்து இருக்கிறார்கள். முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கும் குஷ்பூ இப்படி கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் சீரியலில் தலை காட்டாம ல் இரண்டு வாரங்களுக்கும் மேல் இருப்பது போரடிக்கத்தான் செய்கிறது.

ரொமான்ஸ் பரபரப்பு
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பத்தில் சீரியல் ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டது., இப்போது பரபரப்பு கொஞ்சமும் இல்லை. பஞ்சு மிட்டாய் பட்டர் பிஸ்கட் ரொமான்ஸ் தூக்கலாக இருந்தது இப்போது சுத்தமாகவே அது இல்லை. இப்படிப்பட்ட காட்சிகளில் சரி, குடும்ப காட்சிகளையாவது ரசிக்கும்படி காண்பிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

கொல்கத்தா குஷ்பூ
குஷ்பூ கொல்கத்தாவுக்கு புருஷனைத் தேடிப்போனது. அங்குள்ள தெருக்களில் கணவரை தேடி அலைந்தது என்று காட்சிகள் நன்றாக இருந்தது. குஷ்பூவும் எளிமையாக குடும்ப பெண் போல இருந்தது உண்மையில் நன்றாக இருந்தது.சீ க்கிரம் குஷ்பூவை காமிங்கப்பா!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications