Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கோவா போயிருக்காங்க...!
சென்னை: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பஞ்சு மிட்டாயும். பட்டர் பிஸ்கட்டும் ஹனிமூனுக்கு கோவா போயிருக்காங்க.
அங்கேயும் போய் பஞ்சிமிட்டாய் பாக்கிய லட்சுமியை கொலை செய்ய மினிஸ்டர் பொண்ணு தேஜா திட்டம் போடறா.
ஒரே ஆணை காதலிக்கறதை எத்தனை கதையில காண்பிப்பாங்கன்னு தெரியலை... உலகத்தில் ஆண்களுக்கா பஞ்சம்?

கண்டம் போனாலும்
ஹனிமூனுக்கு கோவா போனாலும் விட மாட்டேன்னு துரத்திக்கிட்டு பழி வாங்க போறது என்ன குணமோ தெரியலை. தேஜா ரவியை அடைய பாக்கியலட்சுமியை கோவாவில் தீர்த்து கட்டப் போறேன்னு பழி வாங்கப் போறா. கண்டம் விட்டு கண்டம் போனாலும் துரத்திட்டு போற அளவுக்கு வசதி உள்ள பொண்ணு கோவாவுக்கு போக மாட்டாளா என்ன?

பஞ்சம் பெண்களுக்குத்தான்
நாட்டில் உண்மையா பார்க்கத் போனால் பெண்களுக்குத்தான் பஞ்சம் அதிகமாக உள்ளது. ஆனால் சீரியல்களில் மட்டும் ஒரு ஆணுக்கு இரு பெண்கள் அடிச்சுக்கற நிலைமை தொடர்ந்துக்கிட்டு இருக்குது. அது மட்டும் இல்லை. ஒரே டிவியில் பல சீரியல்களில் இதே நிலைதான்.

காண்பிங்க பார்க்கறோம்
ஒரு சீரியலிலாவது காதலிச்ச ஆண் வேற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டபின், அந்த பெண் சீ இவன் வேணாம்னு தூக்கி எறிஞ்சுட்டு வேற வாழ்க்கை வாழ்ந்து நிமிர்ந்து நிக்கற மாதிரி கதையை அமைச்சு கொண்டு போங்க. உங்க கற்பனைக்கு நாங்க சபாஷ் போடறோம்..

லட்சுமி ஸ்டோர்ஸ்
லட்சுமி ஸ்டோர்ஸ் கதை இப்படியே போச்சுன்னா.. ரேட்டிங் எப்படி போகுமோ தெரியலை. கோவா போயிருக்காங்க. பாக்யலட்சுமியும், ரவியும் கோவாவை சுத்தி பார்த்து, பாக்கியலட்சுமி குட்டி டிரஸ் போட்டு ரொமான்ஸ் பண்ணினாங்க.. அங்கே தேஜா வந்து பாக்கியலட்சுமியை கொல்ல சதித் திட்டம் போடறாங்க இதுதான் கதை.. வேற என்னத்தை சொல்ல சொல்றீங்க.?
அப்புறம் ரேட்டிங் பத்தி பேசாம என்ன செய்யறதாம்?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications