Lakshmi Stores Serial: சீரியல்களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரிதானா?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யக் கூடாத தவறை எல்லாம் செய்துட்டு மன்னிப்பு கேட்பதாக காதல் கதை பகுதி இருக்கிறது.
மகாலட்சுமி, பாக்கிய லட்சுமியை நம்பிக்கையோடு வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து வீட்டோட வச்சுக்கிட்டு, தன்னோட கடைக்கு வேலைக்கும் அழைச்சுட்டு போறாங்க.
மகாக்கா மகாக்கான்னு மரியாதையை குடுத்த பாக்கியலட்சுமிக்கு தாத்தாவிடம் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வருது. மகாக்காவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்றோம் என்று ஏனோ நினைவு வரவில்லை.

கைநீட்டி அடிக்கலாமா?
பெரிய மனிதர் தேவ்ராஜை சின்ன பெண் பாக்கியலட்சுமி கைநீட்டி அடிக்கலாமா? அதுவும் அவர் இவளது தாத்தாவை அடித்துவிட்டார் என்று கோபம் வருவது சாதாரணம்தான். ஆனால், அவர் தம்பியையே திருட்டுத் தனமா கல்யாணம் பண்ணிக்க வந்துட்டு, அவரது சட்டையை உலுக்கிய போதே பாக்கியலட்சுமிக்கு கோபம் குறைந்து இருக்க வேண்டும்.

குறையாத கோபம்
கோபம் குறையாமல் அவர்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு, அவர்கள் கடையில் வேலைப் பார்க்கும் நன்றியையும் மறந்து,தேவராஜை அடிப்பது ரொம்பக் கொடுமை. இதற்கு மேலும் அந்த வீட்டுக்கே மருமகளாகப் போக வேண்டும் என்று ஆசைப்படுவதும் கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகத்தான் இருக்கிறது.

பிரச்சனை நிறைய
இவ்வளவு பிரச்சனை இருக்கும் நிலையில், பாக்கிய லட்சுமியும், ரவியும் நட்ட நடு இரவில் சாலையில்
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வர்ற மாதிரி ஐஸ்க்ரீம் சாப்பிட்டு ரொமான்ஸ் பண்ணுகிறார்கள். பின்னணியில் காதல் பாட்டு வேற. எதுவுமே கதைக்கு ஒட்டலை.

எப்படி முகத்தில்
சமுதாயத்தில் பெரும் அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெரிய மனிதரை அதுவும் அவரது தம்பி கையால் தாலி கட்டி கொண்டு கன்னத்தில் அடித்துவிட்டு, பின்னர் அவர் வீட்டுக்கே மருமகளாகப் போகணும் என்று கனவு கண்டு கொண்டு இருப்பது, எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்? இல்லை சரியாகத்தான் வருமா? வர வர காதல்; என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மட்டுமே சீரியல்கள் இருக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications