Lakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு!
சென்னை: கேப்டன் என்று செல்லமாக திரையுலகினரால் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், கண்ணுபடப் போகுதய்யா படத்தில் தனது அம்மாவாக நடிக்கும் நடிகை லக்ஷ்மியின் அழகை வர்ணித்து பாட்டு பாடி டான்ஸ் ஆடி இருப்பார்.
மாட்டு வண்டியில் லட்சுமி உட்கார்ந்து இருக்க, பொண்ணு பார்க்கப் போகும் ஜோரில் இந்த பாடலை பாடி ஆடி இருப்பார் விஜயகாந்த்.
அம்மா இத்தனைக்கும், சாதாரண கல் வச்ச மூக்குத்தி மட்டும் அணிந்து, அழகான பொட்டு வைத்து இருப்பார். இதை பார்த்து, என்னதான் இருந்தாலும் அம்மாவின் அழகை வர்ணிச்சு ஒரு மகன் பாடல் பாடுவது என்பது ரசிக்க, அதிகம் காணக் கிடைக்காத பாக்கியம்தானே!
|
மூன்றாம் பிறை பொட்டழகி
இப்போது மூக்குத்தி முத்தழகிகள் சின்ன பெண்களாக இருப்பதில்லை. வீட்டிலிருக்கும், அம்மாக்கள், அத்தைகள், மாமிகள் இப்படி பெரியவர்கள் மட்டுமே மூக்குத்தி அணிவதில் விருப்பம் காண்பிக்கிறார்கள். இந்த காலத்தில் பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதில்லை. அப்படியே வளர்ந்து விட்டார்கள்.
|
விசேஷம் வீட்டில்
வீட்டில் விசேஷம் என்றால் மட்டும் ரெடிமேட் மூக்குத்தி வாங்கி மூக்கில் வளையத்துடன் பொருத்தி விதம் விதமாக, டிசைன் டிசைனாக மூக்குத்தி அணிந்துக் கொள்கிறார்கள். அடுத்த நிமிஷம் அதை கழட்டி வைத்து ,ஃப்ரீயாக இருக்கிறார்கள். இப்போது இது போல மூக்குத்திகள்தான் இன்றைய டிரண்ட்.

மூக்குத்தி டிரண்ட்
பிரபல விளையாட்டு வீராங்கனை சானியா மிர்ஸா புகழடையும் தருணத்தில், வெறும் வளையம் போல மூக்கு குத்தி அணிந்திருந்தார். இது டிரெண்டாகி கல்லூரி பெண்கள் இந்த மூக்குத்தியை போடும் அளவுக்கு சானியா மிர்ஸா மூக்குத்தி ஃபேஷனானது ..

மூக்குத்தி 80 களில்
சரோஜா தேவி சாவித்திரி காலத்தில் மூக்குத்தி, அதுவும் ரெண்டு மூக்குத்தி கூட போடுவது டிரெண்டாகி இருந்தது. பின்னர் காலத்து பிள்ளைகள் மூக்கு குத்திக் கொள்வதை அவுட் ஆஃப் ஃபேஷனாகி விட்டார்கள் . 80 களில் மூக்கு குத்தி மூக்குத்தி அணிவது டிரண்டாக ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்ற நடிகைகள் கூட இதில் இருந்து தப்பாமல் மூக்குத்தி அணிய ஆரம்பித்தார்கள்.

இப்போது டிரண்ட்
இப்போது பல சேனல்களின் சீரியல்களில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் அம்மா வயது, அத்தை வயது பெண்கள் மூக்குத்தியை விதம் விதமாக அணிவது இப்போதைய டிரெண்டாகி உள்ளது. லட்சுமி ஸ்டோர்ஸ் குஷ்பூ அழகாய் மூக்குத்தி மாற்றி மாற்றி அணிந்து வருகிறார். விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் காளி அம்மாவாக வரும் மவுனிகா விதம் விதமாகப் பெரிய மூக்குத்தி அணிந்து நடிக்கிறார்.

நிரோஷா ராதிகா
ராதிகா 80 களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது மூக்குத்தி குத்துவது டிரெண்டாகி இருக்க, சரி குத்திக்கலாம் என்று கடைக்கு போயிருக்கார். அதுவும் இப்போதுதான் லண்டனில் இருந்து வந்து இருந்த தங்கை நிரோஷாவை அழைத்துக் கொண்டு. அங்கு போயி, முதலில் இவளுக்கு குத்தி விடுங்க. அப்புறம் நான் குத்திக்கறேன்னு சொன்னாராம்.

நிரோஷா மூக்கு
அக்கா உனக்கு துணைக்குத்தானே வந்தேன்.. என்னை போயின்னு நிரோஷா அடம் பிடிக்க, கடைசியில் நிரோஷாவுக்கு மூக்கு குத்தி, அவள் அழுததை பார்த்த ராதிகா தான் குத்திக்காமல் வந்துட்டாராம்.. ஆனால், ராதிகா தாலி செயினில் முகப்பு என்று சொல்வார்களே அதை சீரியல்களில் விதம் விதமாக போட்டுக் காட்டி அசத்தியவர்.
|
சிறுமிகளுக்கும் மூக்கு
வட மாநிலங்களில் சிறுமிகளுக்கும் மூக்கு குத்தி, மூக்குத்தி அணிந்து விடுவது பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், இங்கு கல்லூரி பெண்கள்கூட மூக்கு குத்திக்கொள்ள விரும்புவதில்லை. வேண்டுமானால், வேண்டும் என்கிற நேரத்துக்கு, ரெடிமேட் மூக்குத்தி வாங்கி அணிந்து பின்னர் கழட்டி வைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர்.
என்ன சொல்லுங்க.. மூக்குத்தி போல காத்து உக்காந்து பேசுதய்யான்னு கொஞ்சிப் பேசவாவது மூக்குத்தி போட்டுக்கிறது ஒரு அழகுதானே.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications