Lakshmi stores serial: கொல்கத்தாவில் அல்லல் படும் குஷ்பூ!
சென்னை: பிரமாண்டம் என்றாலும், அதிக பொருள் செலவு என்றாலும், அது பயன் உள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது விழலுக்கு இறைத்த நீர் மாதிரிதான் வீணாகப் போகும்.
சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமியின் புருஷன் தேவராஜை, மினிஸ்டரின் தங்கை கடத்தி கொல்கத்தாவில் மறைத்து வைக்கிறாள்.
புருஷனைத் தேடி கொல்கத்தா போறாங்க மகாலட்சுமி. மகா லட்சுமியாக நடிக்கும் குஷ்பூ எளிமையான காட்டன் புடவையில் கொல்கத்தா முழுக்க புருஷன் தேவராஜை தேடி அலைகிறார்.

கொல்கத்தா முழுக்க
கொல்கத்தா நகரின் முக்கிய இடங்களான ஹவுரா பிரிட்ஜ், விக்டோரியா ஹால், சாலையில் பேருந்துக்கு நிகராக ஓடும் டிரெயின் என்று எல்லாவற்றையும் மக்கள் பார்க்கும் அளவுக்கு படம்பிடித்து இருக்கிறார்கள், இங்கெல்லாம் குஷ்பூ கணவனைத் தேடி ஃபேக் போன் தகவல் வர வர அங்கங்கு அலைகிறார். நாமும் அத்தனை இடங்களையும் பார்க்க முடிகிறது.

வித்தியாசமாக டப்பிங்
கொல்கத்தாவில் இந்தியோ அல்லது வங்காள மொழியோ என்ன பேசுகிறார் என்று தெரியாத அளவுக்கு பின்னணியில் எதிரொலி வேற்று மொழி குரல் ஒலிக்க, தமிழில் இவர்கள் பேசுவது என்று சின்னத்திரைக்கு சற்றே வித்தியாசமான டப்பிங் ரசிக்கும்படி இருக்கிறது.

குஷ்பூ எளிமையாக
குஷ்பூ கூட கொல்கத்தாவில் மிக எளிமையான காட்டன் புடவையில்,மேக் அப் இல்லாமல் அழகாக இருக்கிறார். பிருஷனைத் தேடி அலையும் காட்சிகளில் நன்றாக நடித்தும் இருக்கார். ஒவ்வொரு இடமாக ஏமாந்து ஏமாந்து அலையும் குஷ்பூ கடைசியில் புருஷன் இடத்தைத் தேடிப் போகும்போது எதிராளிகளிடம் மாட்டிக் கொள்கிறார்.

சகுந்தலா தேவி மினிஸ்டர்
மினிஸ்டர் சகுந்தலா தேவியாக நடிக்கும் நடிகை சுதா சந்திரன் முமபையில் மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.தனது தயாரிப்பிலும் சீரியல்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர், இப்போது சில வாரங்களாக மும்பையில் முகாமிட்டு இருக்கார் போலும்.அண்மை காலமாக லட்சுமி ஸ்டோர்ஸில் இவருக்கு இணையான இடத்தில் இவரின் தங்கை என்று தெய்வமகள் புகழ் காயத்ரி அதாவது நடிகை ரேகா இப்போது நடித்து வருகிறார். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அக்காவாக நடிக்க சுதா சந்திரன் வருவார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications