Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் குஷ்பூ மாறிட்டார்...!
Recommended Video
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் குஷ்பூ கதாபாத்திரத்துக்கு ஏற்ப எளிமையாக மாறி இருக்கார்.
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலின் நேரம் காலம் காலமாக நடிகை ராதிகாவின் ராடான் டிவிக்கு ஒதுக்கின நேரம். நடிகை ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியல் அவ்வளவாக எடுபடவில்லை.
அதனால், அந்த சீரியலின் நேரத்தை 6:30 மணிக்கு மாற்றிக் கொடுத்து, வஹ்ஸ்க்கமான 9:30 மணி நேரத்தை குஷ்பூ தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒதுக்கித் தந்தது. குஷ்பூவும் இந்த நேரத்தை நன்றாகவே பயன்படுத்தி சீரியலை நன்றாகவே கொண்டு போக வைக்கிறார்.

மகா லட்சுமி
லட்சுமி ஸ்டோர்ஸ் மகா லட்சுமியாக நடிக்கும் குஷ்பூ நல்ல குடும்ப பெண் கதாபாத்திரமாக இருந்தாலும், பரம்பரை ஜவுளிக் கடையை பார்த்துக்கும் நல்ல பொறுப்பிலும் இருக்கார். ஆனால், இவர் வீட்டில் இருக்கும் போதும் சரி, கடையில் இருக்கும்போதும் சரி, பாதி முதுகு தெரியும்படி ஜாக்கெட் அணிந்து மகாலட்சுமியாக நடித்து வந்தார்.

டாட்டூ முதுகு
அதுவும் குஷ்பூ முதுகு, கை கழுத்து என்று எல்லா இடத்திலும் டாட்டூ போட்டு இருப்பார். இதுவும் பாதி முதுகு தெரியும் ஜாக்கெட்டும் சேர்ந்து உண்மையில் மகாலட்சுமி கதாபாத்திரம் எடுபடாமல்தான் இருந்தது. அதோடு எப்போதும் போல ஸ்டைலாக விரித்துப் போட்ட தலை முடியை முன்னால் போட்டுக் கொள்வது என்று கதாபாத்திரத்துக்கு குஷ்பூ ஒட்டாமல்தான் இருந்தார்.

இதை சொல்லாமலே
இதை சொல்லாமலே எப்படி இருக்க முடியும். இவரின் இந்த முதுகு தெரியும் ஜாக்கெட் கதாபாத்திரத்துக்கு ஒட்டவில்லை, கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது என்று சுட்டிக் காண்பித்துதான் இருந்தோம். இதில் தவறு ஒன்றும் இல்லை என்கிற நினைவில்.

சீரியலில் இப்போது
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து பார்க்கும்போது, இப்போது கடந்த ஓரிரண்டு எபிசோட்களாக குஷ்பூ முதுகு தெரியும்படி ஜாக்கெட் அணிந்து வருவதில்லை. தலை பின்னல், போனி டெயில் முதுகை கவர் பண்ணிய ஜாக்கெட், காட்டன் புடவை என்று அசத்தி வருகிறார். பார்க்க நன்றாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications