Lakshmi Stores Serial: பொண்டாட்டின்னா மகாலட்சுமி மாதிரி இருக்கோணும்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமி இப்போது ஒரு பொண்டாட்டின்னா எப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணமா இருக்காங்க என்பது போல நல்லதொரு காட்சியை ஒளிபரப்பி இருக்கிறார்கள்.
மகாலட்சுமி கொழுந்தன் ரவி, பாக்கிய லட்சுமியின் காதலுக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருக்கையில், பாக்கியலட்சுமி, தனது கணவர் தேவராஜை அடித்த விஷயத்தை உமா சொல்ல வரும் போது எதாவது தடங்கல் செய்து விடுகிறார்கள்.
அதற்குள், அண்ணனை அடித்துவிட்டான் என்று பாக்கியலட்சுமி மீது கோபமாக இருந்த ரவியும், இப்போது பழையபடி பாக்கியலட்சுமி மீது காதலுக்கு மாறிவிட்டான். இந்த நிலையில்தான் உண்மையை போட்டு உடைக்கிறாள் உமா.

எனக்கு நினைவு
மகாக்கா எனக்கு நினைவு வந்துருச்சு. அன்னிக்கு ரிஜிஸ்டர் ஆபீசில் என்ன நடந்துச்சுன்னு இப்போதான் நினைவு வந்துச்சுன்னு சொல்ல, என்ன உமா இப்பவாவது சொல்லுன்னு கேட்கறாங்க மகாலட்சுமி. அன்னிக்கு பாக்கிய லட்சுமிகிட்டே நீ செய்யறது தப்பு.. இப்படி எல்லாம் திருட்டு கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு மட்டும்தான்க்கா சொன்னோம். மகாலட்சுமி தேவராஜ் மாமாவை அடிச்சுட்டான்னு சொலல் அதிர்ச்சி ஆகறாங்க மகாலட்சுமி.

பொய்யா உண்மையா?
உமா நீ சொல்றது உண்மையா,பொய்யா? வீணா பாக்கியலட்சுமி மேல பழி போடணும்னு சொல்லாதேன்னு மகா சொல்ல, அக்கா நீங்களே ரவிகிட்டே கேட்டு பாருங்கன்னு சொல்லிட்டு, ரவி இப்போ சொல்லு, பாக்கிய லட்சுமி தேவராஜ் மாமாவை அடிக்கலேன்னு கேட்க, ரவி தலை குனிஞ்சதும், சொல்லு ரவின்னு மகா கேட்கறாங்க. அது வந்து பாக்கியலட்சுமி என்று சொல்ல ஆரம்பிக்க, அப்போ அவ உங்க அண்ணனை அடிச்சது உண்மையான்னு கேட்டு கலங்கி போறாங்க.

அவர் புருஷன்
யார் மேல யார் கை வைக்கறது... உங்க அண்ணன் எனக்கு கணவர் மட்டும் இல்லை.. இந்த வீட்டின் தலைவர்.அவர் ஒரு நாள் ஓய்வெடுத்து நீங்க பார்த்து இருக்கீங்களா? உங்களுக்காகத்தானே அவர் ஓடி ஓடி உழைச்சு தேவையானதை செய்யறார். எனக்கும், அவருக்கும் ஆயிரம் இருக்கும்.அது எங்க தனிப்பட்ட விஷயம்.இந்த குடும்பத்தோட தலைவரை ஒருத்தி அடிக்கிறதா?

அவளை மனசில்
என்ன ரவி.. உங்க அண்ணனை அப்பா மாதிரி மதிக்கறேன்னு சொல்லுவே..இப்போ எவளோ ஒருத்தி அடிச்சு இருக்கா.அடுத்த நிமிஷம் அவளை உன் மனசில் இருந்து தூக்கி எறிஞ்சு இருக்க வேணாம். இந்த வீட்டு தலைவரை அவமதிச்ச அவ இந்த வீட்டுக்கும் வேணவே வேணாம்.கடைக்கும் வேணாம்... இதுதான் என்னோட முடிவுன்னு சொல்லிட்டு கண்ணீருடன் போறாங்க.
பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கோணும்!.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications