Lakshmi Stores Serial: ப்ரியாவை பெற்றது மகாலட்சுமியா சியாமளாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமி புருஷன் தேவராஜுக்கு இரண்டு பொண்டாட்டியா? அதில் ஒருவர்தான் ஷியாமளாவா?

அது சரி, இந்த சியாமளாவுக்கு பிறந்த பெண் குழந்தை ப்ரியாதான் மகாலட்சுமிடம் வளர்கிறதா? அப்போ மகாலட்சுமியின் குழந்தை?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் சீரியலில் எந்தவித பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்பதுதான் உண்மை.கதை ஒரு கலவையா போயிகிட்டு இருக்குது.

குஷ்பூ மகாலட்சுமியாக

குஷ்பூ மகாலட்சுமியாக

பிரியா தன் மகள் இல்லை என்று மினிஸ்டர் சகுந்தலா தேவி சொல்லும் போதும், அவளது பிறப்பு சான்றிதழை கண்டு பிடிச்சு ,ப்ரியா என் குழந்தைதான் என்று திருப்தி அடைவது,த னக்குத் தானே புலம்பிக்கொள்வது என்று இவரின் நடிப்பு அருமை. குழப்பம் எதற்கு, ப்ரியா பிறந்த ஆஸ்பத்திரியில் போயி கேட்டுடலாம்னு கிளம்புகிறார் குஷ்பூ.

பொண்ணு ப்ரியா

பொண்ணு ப்ரியா

பிரியா உங்க பொண்ணுதான்னு டாக்டர் உறுதி படுத்த, அந்த இடத்திலும் குஷ்பூ நடிப்பு வேற லெவல்.என்ன இருந்தாலும் சிறப்பான நடிகையாச்சே. நமக்கே அவரின் குழந்தைதான் பிரியா என்று தெரிய வரும்போது, சந்தோசம் வருகிறது. இருந்தாலும், இ துவும் ஒரு டிராமா தான் என்று அங்கு ஒளிந்து நிற்கும் குஷ்பூ அதாவது மகாலட்சுமியின் கணவர் டாக்டருக்கு நன்றி சொல்லும்போது சந்தேகம் வருது.

பெண் ப்ரியா

பெண் ப்ரியா

பெண் ப்ரியா எந்தவித அழுத்தமான காரியமும் இல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் அதாவது அவளது பெற்ற தாயுடன் ஒட்டிக்கொண்டு, தன்னுடைய அம்மாவை வெறுப்பது ஏன் என்கிற இடத்தை கதையை சரியாக சொல்லவில்லை எனக்கு நீங்க இனிமே அம்மா இல்லைன்னு சொல்லும்போது குஷ்பூ உடைந்து போயி அழும் இடத்திலும் சபாஷ் நடிப்பு. இது அம்மாக்களுக்கு மட்டும் உண்டான உணர்ச்சி என்று தெளிவாக காட்டி இருக்கிறார்.

காதல் மற்றபடி

காதல் மற்றபடி

மற்றபடி பாக்கிய லட்சுமி, ரவி காதல், திருட்டு கல்யாணம், இதை நியாயப்படுத்துவது என்பது எப்போது, எந்த விதத்தில் என்பதை அறிய மட்டுமே ஆடியன்ஸ் காத்து இருக்கிறார்கள். இந்த கதையும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது. மொத்தத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சுமாரான சீரியல்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+