Lakshmi Stores Serial: யாரு இந்த சியாமளா?.. மினிஸ்டர் விளையாட்டு ஆரம்பம்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மினிஸ்டர் சகுந்தலா தேவிக்கு சியாமளா பற்றிய உண்மை தெரிந்துவிடுகிறது. இதை வைத்து மகாலட்சுமியை மிரட்ட நினைக்கிறார் சகுந்தலா தேவி.
ஏற்கனவே லட்சுமி ஸ்டோர்ஸை வாங்க நினைத்த விவகாரத்தில் மகா லட்சுமிக்கும், மினிஸ்டருக்கும் பிரச்சனை வந்து இருவரும் எதிரிகள் போல இருக்கிறார்கள்.
மகாலட்சுமியின் கணவர் தேவராஜ், மினிஸ்டர் சகுந்தலா தேவிக்கு லீகல் அட்வைசர். தேவராஜிடம் ரொம்ப நல்லவர் போல மினிஸ்டர் நடந்து கொள்வார்.. இதனால் மனைவியுடன் எப்போதும் தேவராஜ் பேசுவதில்லை.

சியாமளா சிங்கப்பூர்
அடிக்கடி தேவராஜுக்கு சியாமளான்ற பேரில் போன் வருது.அந்த போன் வரும்போதெல்லாம் தேவராஜ் வெளியில் போயி பேசுவார்.அதை பற்றி கேட்டாலும் பதில் வருவதில்லை. இப்படி எத்தனையோ கஷ்டங்கள் மகாலட்சுமி அனுபவித்து வந்தாலும், குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிட்டு இருக்காங்க.

போதை சாக்லேட்
மினிஸ்டருக்கு சொந்தமான சாக்லேட் தயாரிக்கும் கம்பெனியில், சாக்லேட்டில் போதை பொருள் கலந்து இருப்பதற்கான ஆதாரத்தை காண்பித்து மகாலட்சுமி கேஸ் போடறாங்க. புருஷன், தேவராஜ் சொல்லியும் மகாலட்சுமி கேட்காமல் கேஸ் போடறாங்க. உண்மை தெரியாமல் தேவராஜும் மினிஸ்டருக்காக வாதாடுகிறார்.

ஆயுதம் சியாமளா
தேவராஜையும் தனது பார்ட்னர் ஷிப்பாக மினிஸ்டர் சேர்த்துக்கறாங்க. விசாரணைக்கு ஆஜராகையில், தேவராஜும் மேம் உங்க சாக்லேட் ஃபார்முலாவில் நிஜமாவே போதை மருந்து இல்லைதானேன்னு சந்தேகமாக கேட்கறார். மினிஸ்டருக்கு கோபம் வந்துருது. உங்க ரகசியத்தை உடைக்கிறேன் தேவராஜ்னு சபதம் போடறாங்க மினிஸ்டர்.

இல்லை ப்ரியா
கேஸ் விசாரணை முடிஞ்சு போகும்போது ப்ரியா உன் பொண்ணு இல்லைன்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டு போறாங்க.ஆடிப் போன மகாலட்சுமி பிறப்பு சான்றிதழைப் பார்த்து நிம்மதி அடையறாங்க. இருந்தாலும் நிம்மதி இல்லை. இதற்கிடையில் ப்ரியாவின் அம்மாவும், தேவராஜின் மனைவியுமான சியாமளா சிங்கப்பூரில் இருந்து வந்து இருப்பதை மினிஸ்டர் தெரிஞ்சுக்கிட்டு குடும்பத்தை கெடுக்க நினைக்கிறாங்க.
மினிஸ்டர் விளையாட்டும் ,மகாலட்சுமியின் போராட்டமும் ஆரம்பம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications