Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸில்.. புதுப் புது "ஐட்டங்கள்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் திங்கள் அதாவது இன்று முதல் சனிக்கிழமை வரை ஒரு மணி நேரம் இந்த எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.,

மகாலட்சுமியின் மகள் ப்ரியா பிரச்சனை, ரவிக்கும், பாக்கிய லட்சுமிக்கும் கல்யாணம் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயம், இதற்கிடையில் மினிஸ்டர் சகுந்தலா தேவி மகாலட்சுமிக்கு கொடுக்கும் தொல்லைகள் பற்றி காண்பிக்க அரை மணி நேரம் போதாதாம்.

அதனால்தான் குஷ்பூ நிறுவனமும், சன் டிவியும் சேர்ந்து ஒரு மணி நேரம் இந்த எபிசோடை ஒளிபரப்பும் முடிவுக்கு வந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மகா கொல்கத்தாவில்

மகா கொல்கத்தாவில்

மினிஸ்டர் சகுந்தலாதேவி செய்த சதித் திட்டத்தால், மகாலட்சுமியின் புருஷன் தேவராஜை, கொல்கத்தாவுக்கு அனுப்பி விடுகிறார்கள் போலும். இதனால், புருஷனை எப்படியும் தேடி கொல்கத்தா போக இருக்கிறார் மகாலட்சுமி. மினிஸ்டரின் சதியால் என் கணவர் மாட்டிக்கொண்டு இருக்கும் மாய வலையில் இருந்து காப்பாற்றி, கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வேன் என்று ப்ரோமோவில் கூறுகிறார் மகாலட்சுமி.

அம்மாவை வெறுக்கிறாள்

அம்மாவை வெறுக்கிறாள்

மகாலட்சுமியின் மகள் ப்ரியா அவரின் மகளல்ல, டாக்டர் சியாமளாவுக்கும், தேவராஜுக்கும் பிறந்த குழந்தை என்கிறார்கள். ஆனால்,அது இன்னும் யாருக்கும் தெரியாது, மினிஸ்டருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.ஆனால், தேவை இல்லாமல் அன்பு பாசம் காண்பிக்கும் பிறந்தது முதல் வளர்த்த அம்மாவை ஒரு சிறுமியாக மட்டுமே இருக்கும் ப்ரியா ஏன் வெறுக்க வேண்டும். இது சரியில்லத காரணம்.

நந்தினி சீரியல் நடிகைகள்

நந்தினி சீரியல் நடிகைகள்

லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் மட்டும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதால்,இரண்டு ஸ்டார் காஸ்ட் நடிகைகளும் இணைந்து இருக்கிறார்கள். நந்தினி சீரியலில் நடித்த, அதாவது தெய்வமகள் சீரியல் காயத்ரி மினிஸ்டர் சகுந்தலா தேவியின் தங்கையாக வருகிறார். நந்தினி சீரியலில் கங்காவாக நடித்த நித்யா ராம், ரவியின் முறைப் பெண்ணாக வந்து இறங்குகிறார்.

எபிஸோட் சரிக்கட்ட

எபிஸோட் சரிக்கட்ட

ஒரு வாரத்துக்கு ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பு என்று அறிவித்தாகி விட்டது. அதை சரிக்கட்ட இது மாதிரி புதுப்புது கதாபாத்திரங்களை இறக்கியாக வேண்டுமே. அதற்கு ஏற்ப கதையும் நன்றாக நகர்ந்தால் ஒரு மணி நேரம் போவது தெரியாது. போரடிக்காமல் இருக்கும்.சொல்ல மறந்துட்டோமே... நந்தினி சீரியல் கங்காவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தெய்வமகள் காயத்திரிக்கும்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+