Lakshmi Stores Serial: கையில தாலி குடுத்தா யாருக்கு வேணா கட்டிகிட்டே இருப்பியளா தம்பி?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை இந்த வாரம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒளிபரப்ப நினைத்து அதை செய்து வருகிறார்கள்.
நந்தினி சீரியலில் கங்காவாக நடித்த நித்யா ராம், தெய்வமகள் சீரியலில் காயத்ரியாக பிரபலம் ஆனா ரேகா இருவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதா பாத்திரங்களாக வருகிறார்கள்.
நித்யா ராம் என்ட்ரி காட்சி காமெடியாக இருந்ததால் அதைப்பற்றி கொஞ்சம் பகிர்வு.

வீட்டுக்குள் என்ட்ரி
முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பெண் மகா லட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்து ரவி ரவி.. எங்கங்க போயிட்டீங்கன்னு கத்திகிட்டே நுழையறா. அப்பப்பா காது ஜவ்வு கிழிஞ்சு போற மாதிரி யாரு இப்படி கத்திக்கிட்டு வர்றதுன்னு வேலைக்காரி பொன்னம்மா வராங்க. யாரும்மா நீ ரவி ரவின்னு எங்க கிரிக்கெட் தம்பியை ஏலம் விட்டுகிட்டு இருக்கேன்னு கேட்கறாங்க.

ரவி வரவு
மேலே இருந்து ரவி வந்து யாரு பொன்னம்மாக்கா இதுன்னு கேட்கறாங்க. அதைத்தான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன். உங்க பேரைத்தான் தம்பி சொல்லுதுன்னு சொல்றாங்க.என் பேரையா? யாருக்கா நீங்கன்னு கேட்கிறான்.என்னாது அக்காவா? முனீஸ்வரன் கோயில்ல தாலியை கட்டிப்புட்டு, இப்போ அக்கான்னு கூப்பிடறியான்னு கேட்கிறாள் அந்த பெண்.

கையில் தாலி
சரிதான் கிரிக்கெட் தம்பி.. உங்க கையில தாலியை குடுத்துட்டா யாருக்கு வேணும்னாலும் கட்டிகிட்டே இருப்பீங்க போல இருக்கேன்னு பொன்னம்மா கலாய்க்கறாங்க. அக்கா.. நீங்களுமா? இந்தாம்மா உன்னை முன்னே பின்னே தெரியாது..தாலி கட்டினேன்னு சொல்றேன்னு கேட்டுக்கொண்டு இருக்கும் போதே மகாலட்சுமி வர்றாங்க.

நித்யா இங்கே
ஹாய் நித்யா இங்கே என்ன.. எப்போ வந்தே? எப்படி இருக்கேன்னு கேட்க, அண்ணி யாரு இது.. என்னை தாலி கட்டினேன்னு சொல்லி பயமுறுத்திட்டாங்கன்னு சொல்றான் ரவி.உனக்கு தெரியலையா ரவி..என் சித்தி பொண்ணு நித்யாதான் இவ..உன்னை கலாட்டா பண்ணி இருக்கான்னு சொல்றாங்க.
இந்த காட்சி நகைச்சுவையாக இருந்தது. அதனாலே இந்த பகிர்வு..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications