Lakshmi Stores Serial: குஷ்புவைக் காப்பாற்றுவாளா கொல்கத்தா காளி?
சென்னை: அம்பிகையை வணங்கும் நவராத்திரி பண்டிகை நாட்கள் துவங்கி விட்டன. வீட்டில் கொலு வைத்து பலரும் அம்பிகையை வணங்கி வருகிறார்கள்.
இதை டிவி சேனல்களும் பிரதிபலித்து வருகின்றன. நாள் கிழமை என்று பண்டிகை நாட்களை சொல்வார்கள்.அது போல டிவி சேனல்களின் சீரியல்கள்,நிகழ்ச்சிகள்,இந்த நாள் கிழமைமையை பிரதி பலிக்கும் விதத்தில் சீரியல்களை படம் பிடித்து வருகிறார்கள்.
கொல்கத்தாவில் மிகவும் புகழ் பெற்ற காளிக் கோயிலை இந்த நவராத்திரி நாளில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் காண்பித்து இருக்கிறார்கள்.

காளி கொல்கத்தா
சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமியின் கணவர் தேவராஜை கொல்கத்தாவுக்கு கடத்தி விடுகிறார் மினிஸ்டர் சகுந்தலா தேவியின் தங்கை. இவர் அங்கு இருப்பதை மகாலட்சுமியாக நடிக்கும் குஷ்பூவுக்கு தந்திரமாக காண்பித்து அவரையும் கொல்கத்தா போக வைத்து விடுகிறார்.

தேஜாவுடன் ரவிக்கு
ரவிக்கு தேஜாவுடன் இங்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்றால், இவர்கள் இருவரையும் கடத்தி வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று மினிஸ்டரின் தம்பியும், தங்கையும் யோசித்து இந்த வேலையை செய்கிறார்கள். புருஷனைத் தேடி கொல்கத்தாவின் பல இடங்களிலும் அலைந்த மகாலட்சுமியும் கடைசியில் மினிஸ்டரின் வலைக்குள் மாட்டிக்கறாங்க..

நோ ரவி
ரவிகிட்டே தேஜாவுக்கு தாலி கட்ட சொல்லி சொல்லுன்னு ரவுடிகள் மிரட்ட, மகாலட்சுமி ரவி எனக்கும் உங்க அண்ணனுக்கும் என்ன ஆனாலும் சரி, நீ ஆசைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழனும். இஷ்டம் இல்லாம நடக்கும் கல்யாணத்துக்கு சம்மதிகாதே. கொல்கத்தா காளி எதாவது ஒரு வகையில் காப்பாத்துவான்னு சொல்றாங்க.

குஷ்பூ அழகு
கொல்கத்தாவின் அனைத்து முக்கிய இடங்களிலும் மகாலட்சுமி கணவரைத் தேடி செல்வது போல படம் பிடித்து ஒளிபரப்பி இருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த காட்சிகளில் குஷ்பூ நன்றாக நடித்து இருக்கார். மேக்கப் இல்லாமல் குஷ்பூ அழகாகவும் இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications