பட்டர் பிஸ்கட்.. பஞ்சு மிட்டாய் ஒண்ணு சேருவாங்களா?
Recommended Video

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மத்திய அமைச்சர் சகுந்தலா தேவின்னு ஒரு கேரக்டர். இவங்க வந்தவுடனே குஷ்பூவுக்கு சரியான போட்டியா இருக்காங்க.. இப்போதான் சீரியல் சூடு பிடிச்சுருக்கு.
குஷ்பூவின் தோற்றத்தில் கூட கொஞ்சம் இளமையை காமிச்சு இருக்காங்க.. இன்னும் கூட இளமையா காமிக்கலாம்னு குஷ்பூ ரசிகர்கள் என்னவோ அங்கலாய்ச்சுக்கறாங்க.
ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேத்தி வைக்கறதுதானே சீரியல் எடுப்பவர்கள் கடமை.. இன்னும் இளமையான குஷ்பூவை எதிர்பார்க்கலாம்.

பட்டர் பிஸ்கட்
பஞ்சு மிட்டாய்னு மகா லட்சுமியை, கடையின் உரிமையாளர் ரவி கூப்பிடுவதும், பட்டர் பிஸ்கட்னு ரவியை மகாலட்சுமி கூப்பிடுபவதும் காதல் ஊடல்.காதல் பொங்கி வழியும்போது இருவரும் இப்படி அழைச்சுக்குவாங்க.

வேற மாப்பிள்ளை
திடீர்னு மகாலட்சுமி கடைக்கு வேலைக்கு வரலை. குஷ்பூவும், ரவியும் மகாலட்சுமி வீட்டுக்குப் போக, அங்கு பெண் பார்க்கும் படலம் நடந்துகிட்டு இருக்கு. அதிர்ச்சியில் நிக்கறான் ரவி. கண்கலங்கி நிக்கறா மகாலட்சுமி.

தனியாக
மாப்பிள்ளை பெண்ணுடன் தனியாக பேசணும்னு சொல்றார். சரின்னு அனுமதிக்க, யாரையாவது காதலிச்சு இருக்கீங்களான்னு கேட்கறான். இல்லைன்னு இவ சொல்ல, பாய் ஃபிரண்ட்னு கேட்கறான். யாரும் இல்லைங்கன்னு சொல்றா..

உன் போனை
எங்கே உன் போனை குடுன்னு கேட்கறான் மாப்பிள்ளை. மகாலட்சுமி குடுக்க, யாருமே பாய் ஃபிரண்டு இல்லேன்னு சொன்னே, இங்கே வந்திருக்கானே ரவி அவன் ஆயிரத்தெட்டு போன் பண்ணி இருக்கான்னு கேட்கறான். அவர் வேலைக்கு வர சொல்லிதாங்க போன் பண்ணினார்னு இவ அழுதுகிட்டே சொல்ல, இப்பவே பொய் பேசறியா.. கல்யாணத்துக்கு அப்பறம் எவ்ளோ பொய் பேசுவேன்னு அவன் கேட்க, இவள் அழுகிறாள்.

முடியாமல்
இந்த பேச்சுக்களை பொறுத்துக்க முடியாம குஷ்பூ, ரவி, லட்சுமி குடும்பத்தார் அறைக்குள் வந்துடறாங்க. குஷ்பூ லட்சுமி நல்ல பொண்ணுப்பா.. எதுக்கு இப்படி கேள்வி கேட்கறீங்கன்னு கேட்க, ரவிக்கும், இவளுக்கும் என்னங்க தொடர்பு, எதுக்கு இத்தனை போன் பண்ணி இருக்கான்.. அதை சரிக்கட்டத்தான் லட்சுமிக்கு எவ்ளோ வேணும்னாலும் செய்வோம், எங்க கடையில வேலைபார்த்த பொண்ணுன்னு சொன்னீங்களான்னு கேட்கறான்.குஷ்பூ விடறாங்க ஒரு அறை... எப்பவுமே தட்டி கேட்கறவங்கதானே குஷ்பூ

வண்டியில் பட்டர் பிஸ்கட்
பொண்ணு பார்க்கும் படலம் நின்னு போக, ஜன்னலில் பஞ்சு மிட்டாய் சிரித்த முகத்துடன் பட்டர் பிஸ்கட்டை பார்க்குது. பட்டர் பிஸ்கட் சிரிப்புடன் பஞ்சு மிட்டாயை பார்க்குது. ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துருவாங்களோ...
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications