ஆம்பள மூஞ்சு மாதிரி இருக்கு, நளினமில்லை: விமர்சனங்களை நடிப்பு திறமையால் வென்ற லட்சுமி.. பிரபலம் நச்
சென்னை: எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித், இப்படி தலைமுறை கடந்து வந்த நடிகையாக திகழ்கிறார் லட்சுமி.. எந்த கேரக்டர் தந்தாலும் அசத்துகிற நடிகையாகவும் லட்சுமி விளங்கி கொண்டிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமி பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

"நான் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வந்தபோது, ஆண் முகம் என்று என்னை சொன்னார்கள்.. ஆணுக்கான கம்பீரம் மட்டுமே இருக்கு, பெண்ணுக்கான நளினம் இல்லை என்றார்கள்.. நீயெல்லாம் எங்கே நடிக்க போறே" என கேட்டதாக நடிகை லட்சுமியே பலமுறை பேட்டிகளில் சொல்லி உள்ளார்.
அப்படி சொன்ன இந்த சினிமாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700 படங்களுக்குமேல் நடித்துள்ளார்.. இதுதான் லட்சுமியின் சாதனை.. சிவக்குமாருடன் பல படங்கள் நடித்திருக்கிறார்.. ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடிக்கக்கூடியவர் லட்சுமி மட்டுமே..
வயதுதான் இப்போது 75 ஆகிவிட்டதே தவிர, லட்சுமியின் கேரக்டரில் நடிக்கக்கூடியவர்கள் அவரை தவிர வேறு யாருமில்லை.. லட்சுமி நடித்தாலே தூள் பறக்கும்.. லட்சுமியுடன் நடித்தாலே கவனமுடன் நடிக்க வேண்டும் என்று ஹீரோக்கள் நினைப்பார்கள்..
விஜயகாந்த்: கண்ணுபட போகுதய்யா படத்தில், விஜயகாந்த்துக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதில் விஜயகாந்த் அவரிடம், "அம்மா, உங்க நடிப்பின் முன்னாடி என் நடிப்பு எடுபடவேயில்லை.. உங்க நடிப்புதான் தூக்கலா இருக்கு. உங்க நடிப்பை கொஞ்சம் குறைச்சிக்குங்க" என்று கெஞ்சி கேட்டாராம்.
இப்படி எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித், இப்படி தலைமுறை கடந்து வந்த நடிகையாக திகழ்கிறார்.. எந்த கேரக்டர் தந்தாலும் அசத்துகிற நடிகையாகவும் லட்சுமி திகழ்கிறார்.
ஆசை: அதேபோல, வக்கீல், போலீஸ், கலெக்டர் என எந்த கேரக்டராக இருந்தாலும் எனக்கு தந்துருங்க.. எனக்கு காசு, பணம்கூட வேணாம்.. அப்படியாவது என் ஆசையை தீர்த்து கொள்கிறேன் என்பாராம் லட்சுமி. அந்த அளவுக்கு போலீஸ், கலெக்டர், அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் லட்சுமி. படங்களில் வக்கீல் என்றால், நிஜ வக்கீலாகவே மாறிவிடுவார்.. கலெக்டர் என்றால், பெண்களின் நலனுக்கு போராடக்கூடியவராக மாறிவிடுவார்.
லட்சுமியை போல ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் இன்றுவரை நிலைத்து நிற்கவில்லை.. லட்சுமியின் பாட்டி, லட்சுமியின் அம்மா, லட்சுமியின் மகள் என அத்தனை பேருமே நடிகைகள்.. ஒரே குடும்பத்தில் 4 தலைமுறை நடிகைகள்.. அதனால்தான் லட்சுமியால் அத்தனை கேரக்டர்களையும் அபாரமாக செய்ய முடிகிறது" என்று பெருமையாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படத்தில் லட்சுமியின் அம்மா கதாநாயகியாக நடித்திருந்தார்.. இதே படத்தில் ஹீரோவாக நடித்தவர் லட்சுமியின் அப்பா.. இந்த படத்தில் நடிக்கும்போதே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. இதேபடம் 28 வருடத்துக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் லட்சுமி. ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம். எனினும் குடும்பத்தினர் நடிக்க வைக்கவே லட்சுமியை தயார் செய்தார்களாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications