Lakshmi Stores Serial: உசுப்பேத்தறவங்க கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவங்க கிட்ட கம்முன்னும்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் ரவி, பாக்கிய லட்சுமி கல்யாணம் நடந்ததில் இருந்தே பிரச்சனைதான். கடற்கரையில் ரவுடிகள் தொல்லையால் நடந்த திருமணம்தான்.
இருவருக்குள்ளும் காதல் பெருக்கெடுத்து ஓடியதால் மட்டும்தான் இந்த கல்யாணம் சாத்தியமாயிற்று. இந்த தாலி பிடிக்கலேன்னா கழட்டி வீசிடு பாக்கியலட்சுமின்னும் ரவி சொல்லிட்டான்.
அப்போதுதான் ரவி மீது தனக்கும் அளவில்லாத காதல் இருப்பதை அவனிடம் கூறுகிறாள் பாக்கியலட்சுமி. ஆனால், வீட்டில் இவங்க கல்யாணத்தை ஏத்துக்கறதில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுருச்சு.

தேவராஜ் பாக்கியலட்சுமி
பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் அலுவலகத்தில் தேவராஜை கை நீட்டி அடிச்சுடறா பாக்கியலட்சுமி. இந்த விஷயம் பெரும் பூதாகரமாகி சால்வ் பண்ண முடியாத பிரச்சனை ஆகிவிட்டது. ரவி பாக்கிய லட்சுமியை ஏத்துக்கலாம் என்று நினைக்கும் போது, மகாலட்சுமி புருஷனை அடித்துவிட்ட பாக்கியலட்சுமி இனி தன் குடும்பத்துக்கு தேவையில்லை என்று, அவளை மன்னிக்க மறுத்துடறாங்க மகா லட்சுமி.

அழுகை பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி அழுதுகிட்டே போயிடறா. இனி கடைக்கும் வேலைக்கு வர கூடாதுன்னு மகாலட்சுமி சொல்லிடறாங்க.கடையில் ரவி ரொம்ப சோகமா உட்கார்ந்து இருக்கான். பாக்கியலட்சுமியின் தோழிகள் ரவியிடம் போயி, பாக்கியலட்சுமி ஏன் வரலைன்னு கேட்கறாங்க. எனக்கும் தெரியாது.. உடம்பு சரியில்லையோ என்னவோன்னு சொல்றான் ரவி.

பாக்கியலட்சுமி போன்
நாங்க போன் செய்தாலும் பாக்கியலட்சுமி போன் எடுக்கலை.ஒருவேளை உடம்பு சரி இல்லாமல்தான் இருக்குமோ என்னவோன்னு புலம்பறாங்க. என்னவாக இருக்கும்னு தெரியலையேன்னு பேசிக்கறாங்க.ரவி மவுனமாக உட்கார்ந்து இருக்கான்.என்ன ரவி இப்படியே இருந்தா என்ன அர்த்தம்...பாக்கியலட்சுமிக்கு போன் செய்தியான்னு கேட்கறாங்க.இல்லைன்னு ரவி சொல்றான்.

பொண்டாட்டிக்கு போன்
என்ன பேசறே ரவி...தாலி கட்டின பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை, இப்படி போன் பேசாம இருக்கே.அவளுக்கு உடம்பு சரி இல்லையோ என்னவோன்னு நாங்க கவலையில் இருக்கோம். உனக்கு பொண்டாட்டியாச்சேன்னு அக்கறையே இல்லையான்னு கேட்கறாங்க.
இப்படித்தான்... வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதை எல்லாம் தெரிஞ்சுக்காம காதலுக்கு உதவி செய்யறேன்னு உசுப்பேத்துவாங்க. இப்படித்தான் உசுப்பேத்தறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவங்க கிட்ட கம்முன்னும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.












Click it and Unblock the Notifications