CWC season 6: லட்சுமி ராமகிருஷ்ணனை கருவில் இருந்த போதே எனக்கு தெரியும்! கணவர் சொன்ன காதல் கதை!
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 6 family round-ல் தனக்கும் தனது கணவருக்குமான காதல் கதை குறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விவரித்தார். லட்சுமி அவருடைய அம்மா வயிற்றில் கருவாக இருந்த போதே ராமகிருஷ்ணனுக்கு தெரியுமாமே!
லட்சுமி ராமகிருஷ்ணன், அவருடைய பெயரை கேட்டாலே அவர் கறார் பேர்வழி, ரொம்ப strict officer என்றெல்லாம் தோன்றும். ஆனால் அவருடன் பழகினால்தான் அவர் எதற்கெல்லாம் கோபப்படுவார். எதற்கெல்லாம் அன்பு காட்டுவார் என்பது தெரியும்.

சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோவில் "கள்ளக்காதலர்களை " இவர் கையாண்ட விதம்தான் அவர் மீது கோபக்காரர் என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது என சொல்லலாம். குக் வித் கோமாளி சீசன் 6 கடந்த மே 4ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயர் அடிபட்டது.
லட்சுமி ராமகிருஷ்ணனா
யாரு லட்சுமி ராமகிருஷ்ணனா? அவர் சீரியஸான நபர் ஆச்சே. அவருக்கு குக் வித் கோமாளி செட்டாகுமா என்றெல்லாம் பலர் யோசித்தனர். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் செய்யும் கேரள சமையல் எல்லாமே செஃப்களிடம் அப்ளாஸ் வாங்குகிறது.
பிரியா ராமன்
இவருக்கும் பிரியா ராமனுக்கும்தான் போட்டி என சொல்லலாம். அந்த அளவுக்கு சமையலிலும் அசத்தி வருகிறார். இந்த வாரம் குக் வித் கோமாளியில் பேமிலி ரவுண்ட்! அதாவது போட்டியாளர்களின் கணவரோ, மனைவியோ, சகோதரரோ சகோதரியோ, மகனோ, மகளோ வருகை தந்தனர். அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை, போட்டியாளர் செய்யலாம் என நடுவர்கள் தெரிவித்தனர்.
மாப்பிள்ளை
அப்போது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அவருடைய மாப்பிள்ளை வந்திருந்தார். அவர் மறுவீட்டுக்கு வந்த போது அவருக்கு லட்சுமி என்ன சமைத்து கொடுத்தாரோ, அதையே நேற்றும் சமைத்தார். சமையல் எல்லாம் முடிந்து ஒவ்வொருத்தரையும் டேஸ்டிங்கிற்காக அழைக்கப்பட்டனர்.
கணவர் வந்ததுமே
அப்போது லட்சுமி ராமகிருஷ்ணனின் டிஷ்ஷை டேஸ்ட் செய்ய இன்னொரு புதிய விஐபி வருகிறார் என ரக்ஷன் தெரிவித்தார். Lets welcome Ramakrishnan sir என அறிவித்ததும், லட்சுமியின் முகத்தை பார்க்கணுமே! 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது போல் அத்தனை பிரகாசம்!
அழகான காதல்
கணவர் என்ட்ரி கொடுத்ததுமே கால் வலியையும் பொருட்படுத்தாமல் வேகமாக சென்ற லட்சுமி, கணவரை கட்டித் தழுவினார். அப்போது அவரை செஃப்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது ராமகிருஷ்ணன் கூறுகையில், "லட்சுமி எப்போதுமே விதவிதமாக சமைப்பார். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததும் அது இன்னும் அதிகரித்துள்ளது.
7 வயது வித்தியாசம்
லட்சுமியை அவர் பிறந்தவுடன் நான் போய் பார்த்தேன். அவருடைய அம்மாவிடம், "ஏன் உங்களுக்கு வயிறு பெரிதாக இருக்கிறது" என கேட்டிருக்கிறேன் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அப்போது லட்சுமி, "இவர் எனது தூரத்து சொந்தம். இவருக்கும் எனக்கும் 7 வயது வித்தியாசம்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
இவர் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்திருந்தார். அதை அவரது வீட்டில் பார்த்த நான், அந்த போட்டோ வேண்டும் என அடம்பிடித்தேன். உறவினர்கள் எல்லோரும் "அவன் போட்டோ உனக்கு எதுக்குடி" என்றார்கள்.

பெண் கேட்ட பெரியப்பா
பிறகு நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம். அப்போது எனது கணவரது பெரியப்பாதான் என்னை இவருக்கு பெண் கேட்டு வந்தார். உடனே எங்கள் வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றார் லட்சுமி. அப்போது செஃப் தாமு, "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்பதெல்லாம் இல்லையா, டைரக்ட்டா கல்யாணம்தானா? என கேட்டார்.
கல்யாணமே நடந்திருக்காதே!
அதற்கு லட்சுமி, அவ்வப்போது நோக்கிக் கொண்டோம். நாங்கள் நோக்கியது தெரிந்திருந்தால் இந்த கல்யாணமே நடந்திருக்காதே. அந்த அளவுக்கு சைலன்ட்டாக இருந்து அவர்களே திருமணத்தை முடித்து வைக்க வைத்தோம் என பூரிப்புடன் சொன்னார்.












Click it and Unblock the Notifications