Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhan Bob: மதன் பாபின் மனைவியும் ஒரு பிரபலமாமே! சேம் டூ யூ போல் காதலை சொன்ன சுவாரஸ்யம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த மதன்பாபின் திருமணம் காதல் திருமணமாம். இவருடைய திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நடந்ததாம். இவருடைய மனைவி சுசீலா யார் தெரியுமா, அவரும் ஒரு பிரபலம்தான். மதன் பாப் புற்றுநோயால் நேற்று காலமான நிலையில் அவருடனான நினைவலைகளை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

Madhan Bob

மதன் பாபின் இயற்பெயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. சினிமாவுக்குள் நுழைந்ததும் அவர் தனது பெயரை மதன் பாபு என மாற்றிக் கொண்டார். பின்னர் வானமே எல்லை என்ற படத்தில் நடித்ததிலிருந்து தனது பெயரை மதன் பாப் என மாற்றிக் கொண்டாராம். இவர் 100-க்கும் மேற்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 550 படங்களுக்கு மேல் அவர் நடித்திருந்தார். இடையே, அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பு, சன் டிவியில் "அசத்த போவது யாரு" என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு நிறைய கலைஞர்களை ஊக்கப்படுத்தினார். இவருடைய சிரிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவராம் மதன் பாப். இவரது திருமணம் காதல் திருமணம். இவருடைய மனைவியும் ஒரு பாடகிதான். இசைக் கச்சேரிகளில் மதன் பாபின் மனைவியும் பாடியிருக்கிறார். இருவரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தியுள்ளனராம்.

கச்சேரி

அது போல் இருவரும் கச்சேரிக்காக சென்ற போது மதன் பாபின் மனைவி அவரிடம் "நான் உங்களை காதலிக்கிறேன்" என்றாராம். அதற்கு மதன் பாப், "அப்படியா, அப்ப நானும் காதலிக்கிறேன்" என்றாராம். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு என்பதால் மதன் பாபை தேடி அவருடைய மனைவி வீட்டை விட்டு வெளியே வந்து மதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டாராம்.

அதிர்ந்த மதன் பாப்

இதை கேட்டு மதன் அதிர்ச்சி அடைந்தாராம். ஆனாலும் தன்னை நம்பி வந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்து மதன் பாபு தனது நண்பர்களை அனுப்பி , அந்த பெண்ணை அழைத்து வர செய்து, திருத்தணி கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்தனராம்.

திருத்தணியில் திருமணம்

அப்போது அங்கு திருமணம் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்களாம். அதாவது பதிவு திருமணம் செய்த சான்றை காட்டினால்தான் திருமணம் செய்து வைப்போம் என சொல்லிவிட்டார்கள். இதையடுத்து பதிவு திருமணம் செய்ய நேரம் இல்லாத நிலையில் திருத்தணி கோயில் இருந்த ஒரு விக்கிரகத்தின் முன்பு மதன் பாபு அவருடைய மனைவி கழுத்தில் தாலி கட்டினாராம்.

இசைக் கச்சேரிகள் அதிகம்

நடிகர்களிலேயே அதிகமாக இசை நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடு சென்றவர் மதன் பாபுதான். இவருடைய மகள் ஜனனியும் பாடகிதான். பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான "படிக்காதவன்" படத்தில் "ரோசு ரோசு அழகான ரோசு நான்" என்ற பாடலை பாடியிருந்தார்.

மதன் பாபு யார்

மதன் பாப் அவருடைய குடும்பத்தில் 8ஆவதாக பிறந்தவர். சிறு வயதிலேயே இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டாராம். இவர் யோகா மற்றும் பாக்ஸிங்கையும் கற்றுக் கொண்டாராம். இவரும் ஒரு பாக்ஸர், சார்பட்டா பரம்பரையை சேர்ந்தவர் என்பதை அறிந்த இயக்குநர் பா.ரஞ்சித், இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் அந்த படத்தில் மதனை நடிக்க வைத்திருப்பேன் என்றாராம். காக்கா ராதாகிருஷ்ணனை முன் மாதிரியாக கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டவர் மதன் பாப். எத்தனை சோகம் இருந்தாலும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த இவரின் சிரிப்பை, புற்றுநோய் அடக்கிவிட்டதே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+