வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த லிசா.. ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக்!
கண்மணி சீரியலில் சௌந்தர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் லிசா இணையதளத்தில் போட்டிருக்கும் போட்டோஸ் தான் இப்போ ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது.
இந்த புகைப்படங்களில் அதில் அவர் எக்சர்சைஸ் பண்ணும்போது ஸ்கின் கலரில் போட்டிருக்கும் பேண்ட் பார்த்து ரசிகர்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். ஆனாலும் லிசாவுக்கு இது பெருமையாதான் இருக்காம்.
லிசா ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தான். அவருக்கு ரொம்ப பிடித்த பெண் என்றால் அவங்க அம்மா தானாம். அதற்கு பிறகு பிடித்த நடிகர்கள் என்றால் ,அவர் ரொம்ப சீரியல்கள் எல்லாம் பார்த்தது கிடையாதாம்.

நாய்கள்னா ரொம்ப ஆசையாம்
இவருக்கு ரொம்பப் பிடித்த நடிகர் சஞ்சீவ் தான். இவர்தான் அவருக்கு ரொம்ப பிடித்த கதாநாயகனாம். திருமதி செல்வம் சீரியல்ல இவர் நடித்தது இவருக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. இப்போ அதே சஞ்சீவுடன் இவர் நடிப்பது இவருக்கு ஆச்சரியமாக இருக்கிறதாம். இவர் ஒரு தீவிரமான நாய் பிரியை ஆவாராம். நாய்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். அவருக்கு ரொம்ப பிடிச்ச இடம் என்றால் சென்னைதான்.

தாய் வீடு
எந்த ஊருக்கு எங்க போனாலும் அவருக்கு சென்னைக்கு வந்தா தான் தன் தாய் வீட்டுக்கு வந்தமாதிரி இருக்குமாம். அது மட்டும் இல்ல சத்யா படத்தில் வரும் வலையோசை சாங்க் தான் ரொம்ப இவருக்கு பிடிக்குமாம். இவருக்கு டான்ஸ் எல்லாம் கொள்ளை பிரியமாம். இவருடைய இன்ஸ்டாவில் நிறைய டான்ஸ் வீடியோக்களை போட்டு இருக்காங்க.

சூப்பர் டான்ஸர்
இவர் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் பண்ண ஆரம்பித்து விட்டாராம். மாடலிங் பண்ணிக் கொண்டிருக்கும்போது சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால் சினிமாவில் கவர்ச்சிதான் பிரதானம் என்பதால் நமக்கு கம்பர்டபிளாக இருக்காது என்று வேண்டாம் என சொல்லிவிட்டாராம். ஆனாலும் விடாமல் வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டிக் கொண்டே இருந்ததால், பலே வெள்ளைய தேவா படத்தில் சசிகுமாருடன் நடித்தார்.

பேய் படத்தில்
இதில் சைட் ரோலில் நடித்து இருப்பார். ஆனஆல் அதன்பிறகு அவருடைய பிரண்ட் நிதின் சத்யா மற்றும் பவர் ஸ்டாருடன் சிரிக்க விடலாமா படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து இருப்பாங்க. அதற்குப்பிறகு அசோக் உடன் பிரியமுடன் ப்ரியா படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதற்கு பிறகு வசந்துடன் மை டியர் லிசா என்னும் பேய் படத்தில் பேய் லிசா கேரக்டரில் நடித்திருந்தார்.

டிவிக்கு வந்தார்
அதுக்குப்பிறகு பொதுநலன் கருதி, திருப்புமுனை அப்படி ஏகப்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார். பாருங்களேன்.. சினிமா வேண்டாம்னு போனவரைக் கூப்பிட்டு எத்தனை படம் எடுத்துருக்காங்கங்கன்னு. இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு எந்தப் படமும் பெரிய அளவில் பெயர் வாங்கித் தரலை. இதனால்தான் டக்குன்னு டிவி பக்கம் ஒதுங்கி விட்டார். வந்தவரை அரவணைத்த சீரியல்தான் இந்த கண்மணி.

டிவியோடு செட்டிலானார்
அந்த டைம்ல தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இவர் சௌந்தர்யா ஆக நடித்துக்கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கண்மணி சீரியல் டாப்ல இருக்கிறது. ரசிகர்கள் வட்டாரம் இதற்கு அதிகமாக இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங் இந்த சீரியல் முன்னணியில் இருக்கிறது.

பெரும் ரசிகர் கூட்டம்
இதில் இவர் வெளிநாடு போய் படித்து திரும்பி வந்து கிராமத்தில் வாழும் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் இவருக்கு முழுமையாக பொருந்தியிருக்கிறது. ரசிகர்கள் இவரை சௌந்தர்யாவே பார்க்கிறார்கள். இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் 3k பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட போட்டோஸ் வீடியோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார்.

ரசிகர்கள் ஹேப்பி
இவருக்கு இணையதளத்திலும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இப்போ சூட்டிங் ஆரம்பித்துவிட்டதால் ஷூட்டிங் டைம்ல எடுத்த போட்டோக்களையும் வீட்டில் ஒர்க்அவுட் பண்ணும் போது எடுத்த போட்டோக்களையும் இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பண்ணி குவிக்கிறார்கள். இவரும் போட்டோஸை விதம் விதமாக போட்டுத் தள்ளுகிறார்.. மகிழ்ச்சி!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications