என்னா ஷேப்புடா.. உத்துப் பார்த்து உருகி வியக்கும் ரசிகர்கள்!
சென்னை: இது என்ன ஷேப்பு செஞ்சி வச்ச சிலை போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்துகிறார் லிசா எக்லேர்ஸ்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியல் சவுந்தர்யா கேரக்டரில் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து அசத்திக் கொண்டிருக்கிறார் லிசா எக்லேர்ஸ்.
அது போதாது என்று இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர்களை வசியப்படுத்தி கண்ணிமைக்க கூட விடாமல் தனது அழகை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தும் லிசாவின் புகைப்படங்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

பலே வெள்ளைய தேவா
இவர் சீரியலில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே திரைப்படங்களில் வலம் வந்தவர். முதல் முறையாக பலே வெள்ளைய தேவா படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் முன்னால் தன் முகத்தை காட்டி இருக்கிறார். அதற்குப் பிறகு என் அன்பே லிசா என்னும் பேய் படத்தில் லிசா என்னும் பேயாக நடித்திருந்தார்.

சிரிக்க விடலாமா
இந்த படத்தில் விஜய் வசந்துடன் ஜோடியாக நடித்திருந்தாலும் இதுவும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கொடுக்க வில்லை. அதனால் கிடைத்த வாய்ப்புகளை விட்டுவிடக்கூடாது என்று சிரிக்க விடலாமா என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் நிதின் சத்யா உடன் நடித்திருந்தார்.

இரவு நேர சீரியல்கள்
அதுமட்டுமல்லாமல் பொதுநலன் கருதி எனும் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு பம்பர் பரிசாக சன் டிவியிலிருந்து சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சன் டிவியின் நிகழ்ச்சியில் இரவு நேர சீரியல்களில் கதாநாயகியாக நடித்தாலே பெரும் பிரபலம் ஆகி விடலாம் என்பதுதான் பல நடிகைகளின் கனவாக இருந்து வருகிறது .

கண்மணி செளந்தர்யா
அந்த மாதிரி இவருக்கு கிடைத்தது கண்மணி சீரியல் .இந்த சீரியலில் கதாநாயகியாக தற்போது வரைக்கும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலின் கதாநாயகன் சஞ்சீவ் .இவர் இவர் குழந்தையாக இருக்கும்போதே திருமதி செல்வம் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதை பார்த்து இருக்கிறாராம் .அந்த சீரியலில் சஞ்சீவை ஏற்கனவே நன்றாக பிடிக்குமாம் .

கண்ணன் மாமா
ஆனால் கடைசியில் அவர் உடனே ஜோடியாக நடிப்போம் என்று அவர் கூட நினைத்துப் பார்க்கவில்லையாம். தற்போது வரைக்கும் சன் டிவியில் இந்த சீரியல் டிஆர்பி யில் முதன்மை இடத்தில் இருப்பதற்கு இவரும் ஒரு காரணம். சீரியல்களில் மட்டுமல்லாமல் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் .

செம குளுமை
எப்போதுமே கண்ணுக்கு குளுமையான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் இவர் தற்போது விதவிதமான போட்டோக்களை குவித்து வருகிறார். அதுவும் ஹோட்டலில் தொடங்கி பல்வேறு இடங்களிலும் சுற்றித் திரிந்து விதவிதமாக போட்டோக்களை கிளிக் செய்து கொண்டிருக்கிறார்.

கலக்கல் போட்டோஸ்
அந்த போட்டோக்களை ஒன்றாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடவும் அது அவருடைய ரசிகர்கள் குஷியாகி போய் கமெண்ட்களை கொட்டி வருகிறார்கள். தற்போது இவர் செப்பு சிலை போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். அதிலும் பலர் அவரது முகத்தை பார்க்கவில்லையாம். அந்த அளவிற்கு இவர் வசீகரமாக ரசிகர்களை வசீகரித்து வருகிறார் .

காத்திருக்கும் ரசிகர்கள்
போட்டோவை அப்லோட் பண்ணுனதும் அவருடைய ரசிகர்கள் அவருக்காக லைக்களையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகிறார்கள். அதுவும் இன்னொரு புகைப்படத்தில் அவர் பூக்களை பார்த்து ரசிப்பது போல ரசித்துக் கொண்டிருக்கிறார் .ஆனால் அவர் ரசிப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் வெட்கத்தால் பூக்களே தலைகுனிந்து தனது புன்னகையை வெட்கத்தோடு சிந்தி கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications