Leo Box office collection: லியோ வசூல் வெறும் ரூ 160 கோடிதானாமே! வருமான வரி தாக்கலில் ஷாக்!
சென்னை: லியோ திரைப்படம் ரூ 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி தாக்கலில் அதன் உண்மையான வருமானம் குறித்து இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ என்ற படம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் முதல் நாளிலேயே 148.5 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததாக தயாரிப்பாளர் லலித்குமார் விளம்பரப்படுத்தியிருந்தார்.

அதாவது லியோவை விட 4 ஆயிரம் திரையரங்களுக்கும் அதிகமாக திரையிடப்பட்ட ஷாரூக்கானின் பதான் படத்தின் முதல் நாள் வசூல் 104 கோடியாக இருந்த போது லியோ வசூல் எப்படி 148.5 கோடியாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
எனினும் லியோ தயாரிப்பாளர் லலித்குமாரோ, 4 நாட்களில் 405 கோடி ரூபாய் வசூலானது என்றும் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலானது என்றும் கூறி, லியோ படம் மொத்தமாக ரூ 600 கோடி வசூலானதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித்குமார் தாக்கல் செய்த வருமான வரித் தாக்கலில் மொத்தம் ரூ 160.50 கோடி மட்டுமே வசூலானதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மீதமுள்ள 400 கோடி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்த வருவாய் 404 கோடியில் ஓடிடி உரிமை ரூ 124 கோடி, சாட்டிலைட் உரிமை 72 கோடி, இசை உரிமை 24 கோடி, இந்தி சாட்டிலைட் உரிமை 24 கோடி ஆகியவற்றை கழித்து விட்டு பார்த்தால் படத்தின் தியேட்டர் வசூல் ரூ 160 கோடிதான்.
விஜய் நடித்த படங்களிலேயே லியோ படம்தான் அதிக வசூலை குவித்தது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த கணக்கும் பொய் கணக்கு என தெரியவந்ததால் சமூகவலைதளங்களில் டிரோல் செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கூலி திரைப்படம் 4 நாட்களில் ரூ 404 கோடி பிளஸ் என ரஜினி ரசிகர்கள் விளம்பரம் செய்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த வருமான வரிதாக்கல் காப்பியை ரஜினி ரசிகர்கள் பரப்பி, கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அண்மைக்காலமாக ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். ரஜினியை விஜய் ஒரு ஆடியோ லாஞ்சில் விமர்சித்தது முதல் இந்த மோதல் போக்கு இருந்து வருகிறது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications