பொண்ணுங்களை படிக்க விடுங்கடா...தாலியோட எதுக்கு...?
சென்னை: சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலில் தமிழ்செல்வி காலேஜுக்கு போவதற்கு முன்னால் தன்னை கல்யாணம் செய்துகொண்டுதான் போக வேண்டும் என்று தாலியை கையில் வைத்து மிரட்டுகிறான் முறை மாமன் சரவணன்.
மாவட்டத்தில் முதல் மார்க் வாங்கிய தமிழ்செல்வி தனக்கு முறைமாமன் சரவணனனுடன் நடக்க இருந்த கல்யாணத்தைபுத்திசாலித்த தனமாக நிறுத்தி, கோயமுத்தூர் காலேஜில் சேரப் போகும் சமயத்தில் சரவணன் தன் கையால தாலி கட்டிக்கொள்ள கோயிலுக்கு கூப்பிடறான்.
தமிழ்செல்வி கண்ணீருடன் பேசமுடியாமல் நிற்கிறாள். படித்து கலெக்டராக வேண்டும் என்று ஆசையில் இருக்கும் தமிழ்செல்வி,படிச்சுட்டு உன்னையே கல்யாணம் செய்துக்கறேன் மாமான்னு சொல்லியும் இப்படி மாமன்காரன் மிரட்டினால் என்ன செய்வாள் பாவம்!

ஒரு வழியா கல்யாணம்
முறை மாமனுடன் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி பெரியப்பாவிடம் படிக்க சம்மதமும் வாங்கிவிட்டாள் தமிழ்செல்வி. ஆனால், முறை மாமன் சரவணன், நமக்கு ரெண்டு முகூர்த்தம் குறிச்சு குடுத்தாங்க... அதுல ஒரு முகூர்த்தம் முடிஞ்சுருச்சு.

வேற முகூர்த்தம்
இன்னொரு முகூர்த்தம் இன்று.. அதானால் நான் அரச மரத்தடி பிள்ளையார் கோயிலில் தாலியோட இருப்பேன். நீ காலேஜ் போறத்துக்கு முன்னால வந்துரு. கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறமா நீ போகலாம்னு சொல்றான். தமிழ்செல்வி தயங்க... நீ வரலே.. நான் விஷத்தை குடிச்சுட்டு ஆத்துல விழுந்துருவேன்னு சொல்றான்.

போன் தமிழ்செல்விக்கு
காலேஜுக்கு கிளம்பிக் கொண்டு இருந்த தமிழ்செல்விக்கு போன் வருது. என்ன மாமான்னு கேட்க, கிளம்பிட்டியான்னு கேட்கறான் சரவணன்.. கோயிலுக்குத்தானே என்று கேட்க... இல்லை மாமா காலேஜுக்குன்னு சொல்றா.

தாலியோட நான்
நான் கோயிலில் தாலியோட காத்து இருக்கேன்.. நீ காலேஜுக்கு கிளம்புறியா... நான் சாகப்போறேன்... பரவால்லியான்னு கேட்கறான், மாமான்னு தமிழ்செல்வி இழுக்க... உடனே கோயிலுக்கு கிளம்பி வான்னு கூப்பிடறான் சரவணன். தமிழ்செல்வி கண் கலங்கி நிக்கறா.
படிக்க ஆசைப்படற பொண்ணுங்களை படிக்க விடுங்களேண்டா... எதுக்கு தாலியை வச்சுக்கிட்டு பயமுறுத்தறீங்க....
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications