கதிர் கலக்கும்.. லிங்கம் வெப் சீரிஸ் நல்லா இருக்குதே! ஹாட்ஸ்டாரில் பார்த்தாச்சா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சுமி சரவணகுமார் மற்றும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், கதிர், திவ்ய பாரதி, போஸ் வெங்கட், பூர்ணிமா ரவி, விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி, ஜியோஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது "லிங்கம்" வெப் சீரிஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தை களமாக கொண்டு நகர்கிறது கதை. லிங்கம் என்ற பெரிய தாதா எப்படி உருவானார் என்ற பின்புலத்தை தத்ரூபமாக விளக்குவதற்கு பாடுபட்டுள்ளது சீரிஸ் குழு. போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் லிங்கம், செய்யாத கொலைக்காக சிறை சென்று பிறகு வேறு வழியின்றி ரவுடியாக மாறுவதை யதார்த்தமாக காட்டுவதில் சீரிஸ் ஹிட் அடிக்கிறது.

Lingam web serie

லிங்கமாக "வாழ்ந்துள்ள" கதிர் தனது யதார்த்த நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். அப்பாவியாகவும், ரவுடியாகவும் மாறும்போது கதிர் காட்டியுள்ள உடல் மொழி வித்தியாசம் அதற்கு சாட்சி. லோக்கல் ரவுடிகள் எப்படி முடி வெட்டிக்கொள்வார்களோ, எப்படி உடல் கட்டை, ஏற்றிக்கொள்வார்களோ அப்படியே, தனது உருவத்தை செதுக்கியுள்ளார் கதிர்.

"மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என வரிசையாக சிறப்பான நடிப்பை கொடுத்தாலும் என்னையா ஒதுக்கி வைக்கிறீர்கள்?" என்று தமிழ் திரையுலகை கேட்பது போல இந்த சீரிசில் நடிப்பை கொட்டியுள்ளார் கதிர். தெற்கத்தி சீமையின், சீற்றம், கோபம், பழிக்கு பழி வாங்கும் எண்ணம் ஆகியவற்றை தத்ரூபமாக காட்டியுள்ளனர் இயக்குநர்கள்.

அதேநேரம், கன்னியாகுமரி வட்டார மொழி வழக்கை கையாள்வதில் திணறியுள்ளனர். சில காட்சிகளில் தத்ரூபமாக இருக்கும் வட்டார மொழி வழக்கு, சில இடங்களில் பஸ் ஏறி மதுரை வட்டார வழக்கிற்கு போவது ஏன் என்று புரியவில்லை. நெல்லை தமிழ் மிக்ஸ் ஆனால் பரவாயில்லை, பக்கத்து மாவட்டம், அதுதான் இயல்பும் கூட. ஆனால், தூரத்திலிக்கும் மதுரை வட்டார மொழியில் திடீர் திடீரென சில கேரக்டர்கள் ஏன் பேசுகிறார்கள் என்பதில் அடங்கியிருக்கிறது, தமிழ் சினிமாவின் மதுரை ஆதிக்கம்.

மொத்தத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் கரை சேர்க்கிறது லிங்கம். பார்ட் 2 எப்போது வரும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+