Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lockdown: கொரோனா கொரோனா.. எங்க பார்த்தாலும் ஒரே பாட்டுதான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுக்க லாக்டவுன் சக்ஸஸ் ஆச்சோ இல்லையோ...லாக்டவுன் தொடர்பான கொரோனா வைரஸ் குறித்த பாடல்கள் ஹிட்டாகி வருகின்றன. லாக்டவுன் ஆரம்ப நாட்களில் வெளிவந்த அமிதாப் ரஜினி படம் சூப்பர் ஹிட்.

Recommended Video

    DADDY LITTLE PRINCESS - LOCKDOWN SAMBAVAM EP-02 | MAHADHI TROLL Oneindia Tamil

    ஸ்டே ஹோம் ஸ்டே சேஃப்...பாலிவுட் நட்சத்திரங்கள், டோலிவுட், கோலிவுட், மோலுவுட் நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தபடியே நடித்து இருந்தனர். அமிதாப் தனது சன் கிளாஸை தேடுவதும், மற்ற நட்சத்திரங்களிடம் கேட்டுவிட்டு, ரன்பீர் கபூர் கண்டு பிடித்து தருவதும்தான் கதை.

    முற்றிலும் பிளாக் அண்ட் வொயிட்டில் பார்க்க நன்றாக இருந்தது. அதுவும் நம்ம சூப்பர் ஸ்டார் இந்த கண்ணாடியா என்று கேட்டு கண்ணாடியை கழட்டி கேமிரா பக்கம் போட, கண்ணாடி மீண்டும் அவரது மூக்கில் உட்கார்ந்து கொள்வது போன்ற காட்சி படு சுவாரஸ்யம்.

    இப்படியான லாக்டவுன்

    இப்படியான லாக்டவுன்

    இப்படியான லாக்டவுன் காலத்தில் போதும்டா சாமி என்று அலறி ஓடும் அளவுக்கு கொரோனா பாடல்களும் நம்மைத் திக்குமுக்காட வைத்து வருகின்றன. கானா பாடலில் கொரோனா..சினிமா பாடலில் கொரோனா...ஆல்பம் பாடலில் கொரோனா...ஐயோ முடியலை!

    கமல் கொரோனா சாங்

    கமல் கொரோனா சாங்

    அன்பும் அறிவும் என்று கமல்ஹாசன் மற்றும் பல பாடகர்கள் பாடி இருக்கும் அன்பும் அறிவும் பாடல். இந்த பாடலை வீட்டில் இருந்தபடியே கமல் உள்ளிட்ட யுவன் போன்ற பாடகர்களும் ஆன்லைனில் பாடினர்.ஜிப்ரான் பாடலுக்கு இசை அமைத்து இருந்தார். இந்த லாக்டவுன் ஆல்பத்துக்கு இதுவரை 3 மில்லியனுக்கு மேற்பட்ட வியூஸ் கிடைத்துள்ளதாம்.

    டிவி வாட்சாப் ஃபேஸ்புக் யூடியூப்

    டிவி வாட்சாப் ஃபேஸ்புக் யூடியூப்

    டிவி, வாட்சாப், ஃபேஸ்புக், யூடியூப் என்று எதில் பார்த்தாலும் கிரியேட்டர்ஸ் கை வண்ணம், குரல் வண்ணம் என்று தங்களது திறமையை காண்பிக்கும் வகையில் படைப்புக்கள். அத்தனையும் கொரோனா கொரோனா என்றுதான் கூவுகின்றன. கனவில் கூட கொரோனா கொரோனா என்று கிரியேட்டர்ஸ் பாடல்கள் திடுக்கிட்டு விழிக்க வைக்குது.அவ்ளோ விழிப்புணர்வு தருதுன்னா பாருங்க!

    லாக்டவுன் குறும்படம்

    லாக்டவுன் குறும்படம்

    இந்தநேரத்தில்தான் முழுக்க முழுக்க ஐ போனில் ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்த குறும்படமாக ஆண்ட்ரியா நடித்து இருக்கும் லாக்டவுன் குறும்படம் நாளை வெளிவர இருக்கிறதாம்.யூடியூப் சானலில் வெளியாக இருக்கும் இந்த குறும்படம் லாக்டவுனில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் ஒரு பெண்ணின் மன நிலையைப் பற்றியது என்று சொல்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+