ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாதாமே....!
சென்னை: கிளம்பிட்டாங்கய்யா...! இப்படித்தான் சொல்லத் தோணுது... என்ன மகாபா வீட்டில் பொழுது எப்படி போவுதுன்னு கேட்டுகிட்டு மறுபடியும் காட்சி கொடுத்த நம்ம பிரியங்காவைப் பார்க்கையில்.
கான்செப்ட் இதுதான்... லாக்டவுனில் மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க... எங்களிடம் இருந்து நீங்களும்.. உங்களிடம் இருந்து நாங்களும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுன்னு விஜய் டிவி நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தே கிளம்பிட்டாங்க.
மகாபா வீட்டை துடைத்துக்கொண்டே எனக்கு என்ன ராஜ வாழ்க்கைன்னு சொல்றார். வீட்டில் இருக்கும் இந்த நட்சத்திரங்களை அசெம்பிள் செய்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுன்னு ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது.
|
அமிதாப் பட பாணி
சன் கிளாஸை தொலைத்துவிட்டு தேடி கொடுக்க சொன்ன அமிதாப் பட பாணி!யில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்க உள்ளது விஜய் டிவி. மகாபா பிரியங்கா இருவரும் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் டிவியின் நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். தினமும் இரவு ஒளிபரப்பாக இருக்கிறதாம் இந்த நிகழ்ச்சி.

டிராக்டர் பாலா
லாக்டவுன் காலத்தில் ஷூட்டிங் இல்லாததால், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு பாலா, தனது சொந்த கிராமத்துக்கு போய் அங்கு விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டும் வேலையை செய்து வருகிறாராம். விவசாயிகள் தனிப்பட்ட முறையில் பணிகளை செய்ய எந்த வித கட்டுப்பாடும் இல்லை.

விவசாயமா? விஜய் டிவியா?
விவசாயம் செய்தே பிழைச்சுக்கலாமா இல்லை, மீண்டும் விஜய் டிவி வாய்ப்பு வந்தால் போகலாமா என்கிற எண்ணத்தில் இருக்கும் பாலா, டிராக்டர் ஓட்டியபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருக்கிறார். கலக்க போவது நிகழ்ச்சியின் இன்னொரு புகழ் நட்சத்திரமான புகழும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

இவர் இல்லாமலா
இவ்வளவு இருந்தும் இவர் இல்லாமல் இருக்குமா விஜய் டிவியின் நிகழ்ச்சி. அதுதாங்க நம்ம ரம்யா பாண்டியன்...அவரும் வருவார்.. வனிதா அக்காவும் வருவார்...இன்னும் இன்னும் உங்களுக்கு பிடித்த விஜய் டிவியின் ஸ்டார்ஸ் எல்லாரும் வருவாங்க..ஓடி ஒளியாம பாருங்க!
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications