யார்கிட்டேயும் அசிஸ்டெண்டா இருந்ததில்லை.. கமல் சார் படங்கள்தான்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் திரையின் திருவிழாவில் ஃபேவரைட் இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது.
அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ், தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை. கமல் சார் படங்களை பார்த்து கற்றுக் கொண்டதுதான் என்று கூறினார்.
ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்று சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது.

திரையின் திருவிழா
ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்று சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை பார்த்து பார்த்து, நடத்தியது. நடிகை சுகாசினி, இயக்குநர்கள் கவுதம் மேனன், கரு. பழனியப்பன் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்தனர்.

ஜீ நட்சத்திரங்கள்
ஜீ தமிழ் டிவியின் சீரியல் நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியை எடுத்துக் கொள்ள ஜீ தமிழ் டிவி விழாவை திட்டமிட்டபடி கச்சிதமாக நடத்தி முடித்து இருக்கிறது.விழாவின் முதல் பாகத்தை நேற்றைய தினம் ஞாயிறு அன்று இரவு 11 மணி வரை ஒளிபரப்பி இருக்கிறது ஜீ தமிழ் டிவி.

ஃபேவரைட் இயக்குநர்
ஃபேவரைட் இயக்குநர் விருதை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வழங்கியது. விருதை வழங்கியவர் கமல் ஹசன். கமல் கையால் விருதை வாங்கிய லோகேஷ் கனகராஜ் நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை. சார் படங்களை பார்த்து என்னை வளர்த்துக் கொண்டவன் என்று கூறினார்.

கட்டிப்பிடி வைத்தியம்
இதைக் கேட்ட கமல்ஹாசன் இதனால் எனக்கு பெருமை.. எனக்கு அடுத்த தலைமுறையும் நன்றாக வளர்ந்துக்கொண்டு இருக்கிறது என்று பெருமைப்படுகிறேன் என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று கேட்டு கட்டிக் கொண்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications