இந்த வயசில் போய் இப்படியா.. வேண்டாம் லாஸ்லியா.. உருகும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ரசிகர்களின் மனதில் பசை போல் ஒட்டிக்கொண்ட லாஸ்லியாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு ஆர்மி எல்லாம் வைத்து கொண்டாடி வந்தனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவிற்கு அவர் போட்டிருக்கும் ட்வீட் பல ரசிகர்களின் மனதை காயப்படுத்தி வைரலாக பரவி வருகிறது.
எப்பவும் புதுப்புது கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளாக அறிமுகப்படுத்தும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே பிரபலம் ஆனது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி தான் முடிந்திருக்கும்.

பிக் பாஸ் லாஸ்லியா
அந்த வகையில் லாஸ்ட் சீசனில் அழகில் மட்டும் அல்லாமல் தன்னோட குறும்பாலும் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியா அதே வீட்டில் அவருடன் இருந்த கவினுக்கும் காதல் ஏற்பட்டு அது ரசிகர்களால் ஏற்கப்பட்ட போதிலும் கூட லாஸ்லியாவின் தந்தையால் பயங்கரமாக எதிர்க்கப்பட்டது.
லாஸ்லியாவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருப்பதுபோலவே கவினுக்கும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

லாஸ்லியாவின் ஜோடி
இவர்கள் இருவருக்கும் காதல் என்று பரவிய செய்திகளை ரசிகர்கள் வரவேற்கவே செய்தனர். இவருக்கு ஆதரவாக தான் இருந்தார்கள் . ஆனாலும் இவர்கள் இருவரும் காதலை வெளியே காட்டிக் கொள்ளாமல் கண்களாலே அப்பப்போ அந்த வீட்டில் இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் காதல் கண்ணாமூச்சி விளையாட்டு போல தான் இருந்தது. இதில் மும்முரமாக இருந்த இவர்கள் இருவருக்கும் இடையில் சாக்ஷியும் புகுந்து இவரது காதல் முக்கோண காதல் போல இந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருந்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் காதல்
இவர்கள் இருவரும் வீட்டிற்குள்ளே தங்களது காதலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் வெளியில் போன பிறகு நம்முடைய விருப்பபடி இருந்து கொள்ளலாம் என்று கொஞ்சம் இலைமறைகாயாக தான் நடந்து கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் கவின் 94ம் நாளில் தானாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த லாஸ்லியா மூன்றாம் இடத்தை பெற்று பிரபலமானார்.

சினிமாவில் கவின் - லாஸ்லியா
பிக்பாஸ் மூலம் தங்களுக்கு கிடைத்த புகழ் வாயிலாக கவின் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தில் பங்கேற்றுள்ளார். லாஸ்லியா பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுனுடன் நடிகையாக நடித்து வருகிறார். தங்களுடைய லட்சியத்தை அடைந்த லாஸ்லியா மற்றும் கவின் இருவரும், காதலில் கோட்டை விட்டு விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். பிக்பாஸ் வீட்டில் தான் இவர்கள் காதல் ரொமான்ஸ் எல்லாம் ஏகபோகமாக இருந்தது.

எந்த டச்சும் இல்லை
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவர்களுக்குள் அந்த அளவிற்கு எந்த டச்சும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது. இருவரும் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து தான் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் லாஸ்ஸியா தற்போது புகைப்படங்களுடன் வெளியிட்ட வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நான் வாழ்ந்தேன் நேசித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் அதுமட்டுமின்றி தவறுகளும் செய்தேன். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் கற்றுக்கொண்டேன் என்று அவர் எழுதி இருந்த வரிகள் தன் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று சந்தேகம் பலரின் மனதிலும் தோன்றுகின்றது..

ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
ஆனால் கவின் இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. ஆனால் ரசிகர்கள் தான் லாஸ்லியாவின் இந்த கமெண்டை பார்த்து மிகவும் மனதுருகி இருக்கிறார்களாம். இந்த வயசிலேயே இப்படி எல்லாம் ரொம்ப அனுபவப்பட்டது போல பேசுகிறீர்களே நீங்கள் இந்த மாதிரி பேசுவது எங்களுக்கும் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது எப்பவும் குழந்தை போல் சிரித்த முகமாக துள்ளலான ஆட்டம் போட்டுக்கொண்டு பட்டாம்பூச்சி போல பறந்து கொண்டிருந்த அவர் தற்போது இந்த அளவிற்கு வாழ்க்கையே வெறுத்து பேசியிருப்பது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications