Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாஸ்லியா கல்யாணத்தைக் கூட பார்க்காம போயிட்டீங்களே.. கதறும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணத்திற்கு காத்திருக்கும் லாஸ்லியாவுக்கு திடீரென்று இப்படி ஒரு அதிர்ச்சி கிடைக்கும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை, அவருடைய ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.

அவருடைய காதல் திடீரென்று முறிந்து கவினுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவருடைய தந்தைக்காக தான் தன்னுடைய காதலையும் விட்டு விட்டார். ஆனால் அந்த தந்தையே திடீரென்று இறந்து போயிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளின் உயர்வு, திருமணம் என எதையுமே பார்க்காமல் மரியநேசன் மரணித்திருப்பது அவரது ரசிகர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

நியூஸ் ரீடர்

நியூஸ் ரீடர்

லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தான் டிவியில் தோன்றினார். அவருடைய தமிழ் உச்சரிப்பை பார்த்து பல ரசிகர்களும் அவருக்கு அடிமையாகிவிட்டனர் .அந்த அளவிற்கு அவருடைய அழகான செய்தி வாசிப்பதைப் பார்த்தும் அழகிலும் ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார் .அதை விடவும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் ஆனார்கள் .

செல்ல மகள்

செல்ல மகள்

இந்த வீட்டிற்குள் இவருடைய குறும்பை பார்த்து இன்னொரு தந்தையாக சேரன் மாறி இருந்தார். லாஸ்லியா தனது தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தை அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் பேசிக் கொண்டுதான் இருந்தார். அந்த அளவுக்கு தந்தையின் மீது பாசத்தை வைத்திருந்த அவருக்கு தற்போது பேரிடி வந்து இறங்கி இருக்கிறது.

சினிமாவில் வாய்ப்பு

சினிமாவில் வாய்ப்பு

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வர ஆரம்பித்தன. ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் .சமீபத்தில்தான் அவரது திருமண நிச்சயதார்த்த செய்தியும் கூட வந்து சேர்ந்தது. அவருக்கு திருமணம் என்றும் செய்தியும் வெளியாகி வந்தது .இந்த நிலையில் அவரும் அவருடைய வருங்கால கணவரும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் குவித்து வந்தனர் .

திருமண செய்தி

திருமண செய்தி

இதுவும் வைரலாக பரவி வந்தது. தன்னுடைய குடும்பத்திற்காக எதிர்கால வாழ்க்கையை சந்தோஷமாக வாழ காத்திருந்த லாஸ்லியாவின் தந்தையின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ஆறுதலாக இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மகளாய் நிறைவேற்றுங்கள்

மகளாய் நிறைவேற்றுங்கள்

ஒரு ரசிகர் இப்படி சொல்லியிருக்கிறார் - ஒரு தந்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.. அவர் ஆசை எதுவோ ஒரு மகளாய் அதை நிறைவேற்றவும்!! So sad to hear thisCrying faceCrying face.. May his soul Rest In Peace!!! Stay strong losliya! என்று அவர் ஆறுதல் கூறியிருக்கிறார்.

நீங்கதான் இனி அப்பா

நீங்கதான் இனி அப்பா

இன்னொரு ரசிகர் உறுக்கமாக இப்படிக் கூறியிருக்கிறார். அம்மாவிற்கு ஆறுதலாய்,, தங்கைகளுக்கு ஓர் தந்தையாய் இனி இருப்பாய்... ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... என்று அந்த ரசிகர் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்த முயன்றிருக்கிறார். இப்படி ரசிகர்கள் தொடர்ந்து குமுறலை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+