பவுர்ணமிக்கு குடுத்த லவ் லெட்டர் தங்கச்சி பவானிகிட்ட போயிருச்சே...!
சென்னை:சன் டிவியின் பவுர்ணமி சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல். தொழிலதிபர் சக்கரவர்த்தியின் முதல் தாரத்துக்கு பிறந்த பவுர்ணமியை வெறுக்கும் அப்பா இவர்.
பவுர்ணமி ராசி இல்லாதவள்...அவளை பார்த்து செல்லும் காரியம் உருப்படாது..பிறந்த போதே தனது உயிருக்கு உயிரான மனைவியை விழுங்கியவள்னு சக்ரவர்த்திக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
அதனால ரெண்டாம் தாரத்துக்கு பிறந்த பவானி மட்டும்தான் சக்ரவர்த்தி தனது பெண் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர். பவுர்ணமிக்கு பாட்டி, சித்தி, தங்கை பவானிதான் ஆதரவு. சித்தியும், பவானியும் சக்கரவர்த்திக்கு தெரியாமத்தான் பவுர்ணமிகிட்ட பேசமுடியும்.

பவானி
இந்த சமயத்துலதான் பவுர்ணமியுடன் படிச்ச ராம்கி பவுர்ணமிக்கு பழக்கமாகறான். ராம்கியை அடிக்கடி பார்க்க நேர்ந்ததால் பவுர்ணமியின் தங்கச்சி பவானி ராம்கியை ஒரு தலையா காதலிக்க ஆரம்பிச்சுடறா.

லவ் லெட்டர்
பவுர்ணமியை சந்திச்சதிலிருந்து பவுர்ணமியை காதலிக்க ஆரம்பிச்சுடறான் ராம்கி .ராம்கி தத்து பிள்ளையாக வளர்க்கும் ஒரு சிறுவன்,அண்ணனின் காதலை புரிஞ்சுகிட்டு, ராம்கி எழுதற மாதிரி ஒரு லெட்டர் எழுதி பவுர்ணமி வீட்டுக்கே போயி குடுக்கப் போறான்.

அப்பா கையில்
பவுர்ணமியின் அப்பா வாசலில் நிற்க, உங்க பொண்ணுக்கு இந்த லெட்டரை எங்க அண்ணன் குடுக்க சொன்னாருன்னு சொல்றான். என்கிட்டயே குடு.. என் பொண்ணுகிட்ட நானே குடுத்துடறேன்னு சொல்றார் பவுர்ணமியின் அப்பா.

பவானி கையில்
சக்கரவர்த்திக்கு பொண்ணுன்னா அது பவானிதானே..பவுர்ணமியைத்தான் தன் பொண்ணாவே அவர் நினைப்பதில்லையே.. அதனால லெட்டரை கொண்டு போய் பவானி கையில் தர்றார்.

சந்தோசம்
பவானி வேற அப்பாகிட்ட ஒரு பையனை காதலிக்கறதா ஏற்கனவே சொல்லி இருந்ததுனால அப்பாவும் ஒண்ணும் கேட்கலை.பவானிக்கு லெட்டரை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்.

பவுர்ணமிகிட்ட
இந்த லெட்டரை பவுர்ணமி அக்காகிட்ட காமிக்கணும்னு பவானி போறா.அதுக்குள்ளே அப்பா வந்து கத்தறார். அவ கையில குடுத்து உன் வாழ்க்கை நாசமா போகணுமான்னு கத்தறார்... பவானி நிற்க, பவுர்ணமி அழறா.

காமிக்க போக
மறுநாள் பவுர்ணமிகிட்ட பவானி காமிக்கப் போக, பவுர்ணமி வேண்டாம் பவானி.. அப்பா சொன்ன மாதிரி நான் ராசி இல்லாதவ..கல்யாணம் நடக்கும் போது நான் மாப்பிள்ளையை பார்த்துக்கறேன்னு சொல்றா.

ஐ லவ் யூ
ராம்கியிடம் வந்து நின்ற பவானியை பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்கறான் ராம்கி. ராம்கி ஐ லவ் யூ ன்னு சொல்றா பவானி. என்னது அதிர்ச்சியில் நிக்கறான் ராம்கி. நீங்க லெட்டர்ல சொன்னதை நான் நேரில்வந்து சொல்றேன்..இப்படி நிக்கறீங்கன்னு கேட்கறா.

குழப்பத்தில் ராம்கி
ராம்கி குழப்பத்தில் நிக்கறான்.லெட்டர்ல அப்படி உருகி உருகி எழுதிட்டு இப்போ இப்படி சும்மா நிக்கறீங்க..ஐலவ் யூன்னு சொல்லிட்டு கிளம்பறா. ஹலோ ஹலோன்னு இவன் கூப்பிட, நான் ஒண்ணும் டெலிபோன் பூத் இல்லை. என் பேரு பவானின்னு சொல்லிட்டு போறா

சொல்றது
இவ பவுர்ணமி தங்கச்சியா...லெட்டர் மாறிப்போச்சா.. அதை இவ கிட்ட சொல்லி எதுவும் தப்பாயிருமா..இவ பாட்டுக்கு தற்கொலை பண்ணிகிட்டா என்ன பண்றது? ஆனா,என்னால பவுர்ணமியை விட்டு குடுக்க முடியாது..இப்போ என்ன பண்றது...
சே..இந்த சின்ன பையன் இப்படி பழி வாங்கிட்டானேன்னு புலம்பறான். இப்போ ராம்கி அக்காவுக்கா, தங்கச்சிக்கா...பார்க்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications