Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் பிரசாந்த்துக்கு அதிர்ஷ்டம்! அதுவிடுங்க, சென்னை டூ ஊட்டிக்கு பைக்கில் போன அஜித்குமார்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலும் தான் நடித்த படங்களில் பணிபுரியும் டெக்னீஷியன்களுக்கு பைக் வாங்கி தருவார் அஜித்.. தன்னுடைய வீட்டில் விசுவாசமாக பணிபுரியும் அத்தனை பணியாளர்களுக்கும், தனித்தனியாக வீடு கட்டி தந்திருக்கிறார்.. தன்னுடன் இருப்பவர்களை சந்தோஷமாக குறையின்றி வைத்து கொள்வார்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு புகழாரம் சூட்டியிருக்கிறார். அத்துடன் அஜித் பற்றி சில தகவல்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தமிழில் அஜித்தின் முதல்படம் அமராவதி.. எஸ்பிபிதான், தயாரிப்பாளருக்கு அந்த படத்துக்கு அஜித்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.. முதல் படமே தனக்கு 1 லட்சம் வேண்டும் என்று கேட்டு துணிச்சலாக கேட்டார் அஜித்.. இதைக்கேட்டு அதிர்ந்த தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம், "நான்தான் உங்களை அறிமுகப்படுத்துகிறேன், இப்படி டிமாண்டு செய்கிறீரே?" என்று கேட்டாராம்.

Television Prasanth Ajithkumar

அதற்கு அஜித், "எனக்கு சில கடன்கள் இருக்கு, அதை அடைத்தால்தான், படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க முடியும்" என்றாராம்..
அதன்படியே 1 லட்சம் சம்பளம் தந்திருக்கிறார். தன்னுடைய சொந்த பைக்கையே அமராவதி படத்துக்கு அஜித் பயன்படுத்தியிருப்பார்.

ஊட்டி டூ சென்னை

இந்த படம் ஷூட்டிங் முழுக்க ஊட்டியில் எடுக்க முடிவானது. எனவே, ஊட்டிக்கு வந்துவிடும்விடி, அஜித்துக்கு ரயிலில் டிக்கெட் போட்டு தந்துள்ளார் தயாரிப்பாளர். அதற்கு அஜித், "இந்த படத்தில் நான் பைக்குடனேயே இருப்பது போன்ற கேரக்டர் என்பதால், சென்னையிலிருந்து ஊட்டிக்கு பைக் ஓட்டிட்டே வருகிறேன்" என்றாராம்.

"ரொம்ப தூரமா இருக்கே" என்று தயாரிப்பாளர் சொல்லியும், பைக்கில் தனக்கு மிகவும் ஆர்வம் என்று சொல்லி, ஊட்டிக்கு சென்னையிலிருந்து ஓட்டி வந்துள்ளார்.. வெற்றிப்படம், தோல்விப்படம் என்று அமராவதியை சொல்ல முடியாது. ஆனால், அஜித்தை அடையாளப்படுத்திய படம்.. ஆனாலும் தொடர்ந்து படங்கள் எதுவும் வரவில்லை.. கம்பெனி கம்பெனியாய் ஏறி இறங்கினார்.

ராஜாவின் பார்வையிலே

விஜய்யுடன் சேர்ந்து, ராஜாவின் பார்வையிலேயே என்ற படத்தில் நடித்தார் அஜித். மிடில் கிளாஸ் குடும்பம் என்றாலும், சின்ன நிதி நெருக்கடியில் அஜித் இருந்ததால், 10 நிமிடம் நடிக்கக்கூடிய சான்ஸையும், அந்த படத்தில் பயன்படுத்தி கொண்டார்..

ராஜாவின் பார்வையிலே முடிந்ததுமே ஒரு பைக் ரேஸை சந்தித்தார்.. இதில் முதுகுத்தண்டு உடைந்து அவதிப்பட்டார்.. இதனால், அஜித்தை யாருமே கண்டுகொள்ளவில்லை, படவாய்ப்புகளும் தரவில்லை. சினிமா வாய்ப்பு வராமல் போக, இந்த பைக் விபத்து பெரிய காரணங்களாகிவிட்டது. அதனால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிற்று..

படுத்த படுக்கையாய்

சுபாஷ் என்ற இயக்குனர் அஜித்தை சந்தித்து, ஒரு படம் எடுப்பதாகவும், அதில் படுக்கையில் நோயாளி கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் அணுகினார். அந்த படத்தில் அஜித் நடித்தார். தொடர்ந்து சுபாஷ் இயக்கத்தில் 2 படங்கள் நடித்தார்.. ஆனாலும் வசந்தின் ஆசை படம்தான் அஜித்துக்கு தனி அடையாளம் கிடைத்தது.. வேறு பரிமாணங்களை காட்டக்கூடியவர் என்ற அடையாளம் அஜித்துக்கு அதில் கிடைத்தது.

அதற்கு பிறகுதான், அஜித், விஜய் இருவருக்கும் போட்டி ஆரம்பமானது.. ஆனால் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை கடந்தவர் அஜித்.. தீனா படத்துக்கு முன்புகூட விபத்தை சந்தித்தார்.. மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அஜித் பழையபடி எழுந்து நடமாட மாட்டார் என்று நினைத்து நிறைய தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு தந்த அட்வான்ஸை திருப்பி வாங்கினார்கள்.. அதில் பிரசாந்தை நடிக்க வைத்தார்கள்.

பெரிய ஹிட் வாலி

ஆனால், தீனா படம் ஆக்‌ஷன் ஹீரோ என்ற உச்சத்தை தந்தது.. தீனா படத்துக்கு பிறகு, அஜித்தை கொண்டாட துவங்கினார்கள்.. அதிலிருந்துதான் தலை என்ற பெயர் அஜித்துக்கு வந்தது.. வாலி படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.. அந்த படம் வெற்றி படமாக அமைந்ததால், எஸ்ஜே சூர்யாவுக்கு மாருதி கார் வாங்கி தந்தார் அஜித்..

பெரும்பாலும் தான் நடித்த படங்களில் பணிபுரியும் டெக்னீஷியன்களுக்கு பைக் வாங்கி தருவார் அஜித்.. தன்னுடைய வீட்டில் விசுவாசமாக பணிபுரியும் அத்தனை பணியாளர்களுக்கும், தனித்தனியாக வீடு கட்டி தந்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+