நெட்ப்ளிக்சில் அதிக வியூஸ் பெற்ற 2வது தென் இந்திய படமானது லக்கி பாஸ்கர்! முதலிடத்தில் ஒரு தமிழ் படம்
சென்னை: இரண்டாவது வாரமும் Netflix-ல் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கும் துல்கர் சல்மான், ராம்கி நடித்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் முதல் இரண்டு வாரங்களில் மொத்தம் 11.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், நெட்ப்ளிக்சில், தென் இந்திய திரைப்படங்களிலேயே அதிகமான வியூஸ் பெற்ற 2வது திரைப்படம் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. முதலிடத்தில் இருப்பது ஒரு தமிழ் படம் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.
முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் Netflix-ல், லக்கி பாஸ்கர் அதிகம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாரத்தில் மொத்தம் 6.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது இத்திரைப்படம். இரு வாரங்களையும் கூட்டிப் பார்த்தால், உலகளாவிய Netflix-ன் முதல் 10 ஆங்கிலமல்லாத படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் லக்கி பாஸ்கர் பிடித்துள்ளது.

வாரா வார வியூஸ் விவரம்: முதல் வாரம்: 5.1 மில்லியன் - ரேங்க் 2. அதேநேரம், 2 வது வாரம் இந்த படம் 6.6 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. ரேங்க் வரிசையில் 2-லேயே தொடர்கிறது.
ட்ரெண்டிங்: துல்கர் சல்மான், ராம்கியின், 'லக்கி பாஸ்கர்' முதல் வாரத்தில் 5.1 மில்லியன் பார்வைகளை பெற்றதன் மூலம் ஒரு தென்னிந்திய படத்திற்கான அதிகபட்ச முதல் வார வியூஸை பதிவு செய்தது. அதற்கு முன்பு, கல்கி 2898 ஏ.டி. தனது முதல் வாரத்தில் 4.5 மில்லியன் வியூஸ் பெற்றிருந்தது.
இரண்டாவது அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படம்: இரண்டு வாரங்களிலேயே, 'லக்கி பாஸ்கர்' ஏற்கனவே Netflix-ல் இரண்டாவது அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக மாறியுள்ளது. வரும் வாரங்களில் டாப் 10-ல் இருந்து வெளியேறாமல், முதலிடத்தை பிடிக்க முடியுமா என பார்க்க வேண்டும். முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பது விஜய் சேதுபதி நடித்த தமிழ் திரைப்படமான மஹாராஜா ஆகும்.
முதலிடத்தில் மகாராஜா: குழந்தை மீதான பாலியல் அத்துமீறலுக்கு பழி வாங்கும் ஒரு தந்தையின் கதை இது. வித்தியாசமான திரைக்கதை அமைப்பு மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு ஆகியவை நெட்ப்ளிக்சில் இதுவரை அதிகம் வியூஸ் பெற்ற தென் இந்திய படம் பெற்ற மகுடத்தை மகாராஜாவுக்கு சூட்டியுள்ளது. அதன் மொத்த வியூஸ் 19.7 மில்லியன் ஆகும். இன்னமுமே அப்படத்தை பார்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் அதை முறியடிக்குமா அல்லது மகாராஜாவிடம் சரணமடையுமா என்பதை வரும் வாரங்கள் முடிவு செய்யும்.

2024-ல் Netflix-ல் ஸ்ட்ரீம் செய்யப்படும் டாப் 10, தென்னிந்திய படங்களால் பெறப்பட்ட மொத்த வியூஸ் இதோ:
மஹாராஜா: 19.7 மில்லியன், லக்கி பாஸ்கர்: 11.7 மில்லியன், தேவரா: 8.6 மில்லியன், கல்கி 2898 ஏ.டி. (ஹிந்தி): 8 மில்லியன், இந்தியன் 2: 6.8 மில்லியன், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Goat): 6.2 மில்லியன், சாரிப்போதா சனிவாரம்: 5.3 மில்லியன், மெய்யழகன்: 4.7 மில்லியன், அமரன்: 4.1 மில்லியன், அன்வெஷிப்பின் கண்டேதும் (மலையாளம்): 3.6 மில்லியன் ஆகும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications