lucky bhaskar ott: வடாபாவ் கூட வாங்க முடியாத துல்கர்! லக்கி பாஸ்கராவது எப்படி? ஓடிடி ரிலீஸ் எப்போது?
சென்னை: நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் ஓடிடியில் வரும் 30ஆம் தேதி ரிலீஸாகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் மம்முட்டியின் மகன். மலையாள படங்களில் அதிகம் நடித்து வந்தாலும் தென்னிந்திய மொழி படங்களுக்கும் இவருக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது.

அவரது நடிப்பில் வெளியான சீதா ராமம் என்ற திரைப்படம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அவர் நடித்த கிங் ஆப் கோதா என்ற திரைப்படம் அந்தளவுக்கு வெற்றியை தரவில்லை.
இந்த நிலையில்தான் வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் படம் வெளியானது. இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் துல்கருடன் கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் 1992 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது போல் கதை களம் அமைந்துள்ளது.
அதாவது வங்கியின் காசாளர் ஆக துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு கடன் மேல் கடன் இருந்தாலும் நேர்மையாக தனது வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில்தான் கடன் தொல்லை தாளாமல் தனது நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு வங்கியை ஏமாற்றி பெரும் செல்வந்தன் ஆகிறார். இதனால் சாதா பாஸ்கர் லக்கி பாஸ்கர் ஆகிறார்.
மேலும் நிதி மோசடியை மையமாக வைத்தும் இந்த கதை அமைந்துள்ளது. கஷ்ட காலத்தில் இருந்த போது தனது குழந்தைக்கு வடாபாவ் வாங்கிக் கொடுக்க முடியாத தந்தையாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் துல்கர்.
அது போல் கதாநாயகி மீனாட்சியை ஏதோ டூயட், மசாலா போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் பிளஸ்! இந்த படத்தின் வசனங்கள் எல்லாம் அருமை.
அதிலும் வேகமா ஓடுற வண்டியும் வேகமா வர்ற பணமும் என்னைக்காவது ஒரு நாள் கீழத் தள்ளிரும், ஒரு அரைமணி நேரம் நான் நினைச்சப்படி நடக்கலைங்கறதுக்காக வாழ்க்கையை வெறுத்திட முடியுமா என்ற வசனங்கள் எல்லாம் அருமை.
இந்த நிலையில் வசூல் ரீதியாக ரூ 100 கோடிக்கு மேல் குவித்துள்ள நிலையில் இந்த படம் தற்போது வரும் 30ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications