மாநாடு பட ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன்.. இரண்டாம் தாரமாக நடிகர் ஸ்ரீராமை மணந்தாரா? உண்மை இதுதான்
சென்னை: தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் ஆகியோர் திருமணம் செய்துகொண்டார்கள் என்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், கல்யாணி ப்ரியதர்ஷன் மணமகளாகவும், ஸ்ரீராம் ராமச்சந்திரன் மணமகனாகவும் தோன்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்சன், இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசியின் மகள் என்பது நமக்குத் தெரியும். பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பிறகு, தெலுங்கு படம் 'ஹலோ' மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தந்தை மற்றும் தாய் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்தாலும், கல்யாணி நான்கு படங்களில் நடித்த பிறகே மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
திருமண வீடியோ: ஸ்ரீராமுக்கும் கல்யாணிக்கும் இடையே சொல்லிக்கொள்ளாமல் திடீரென திருமணமாகிவிட்டது என்று ஊரெல்லாம் பேச்சு எழுந்தது. இன்னும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கல்யாணி ஏன் இப்போதே திருமணம் செய்தார் என்ற முணுமுணுப்புகளை எழுப்பினர் ரசிகர்கள். ஆனால், இந்த வீடியோ ஒரு விளம்பரப்படத்திற்காக படமாக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. 'யெஸ் பாரத் வெட்டிங் கலெக்ஷன்ஸ்' என்ற ஒரு நகைக் கடையின் விளம்பரத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதற்காகத்தான் இந்த ஷூட்டிங் நடந்துள்ளதாம்.

ஸ்ரீராம் ராமச்சந்திரன்: தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில சினிமா படங்களில் நடித்துள்ள ஸ்ரீராம் ராமச்சந்திரன், 'கஸ்தூரிமான்' போன்ற தொடர்களின் மூலம் பிரபலமானவர். இவர் ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகளுக்கு தந்தையாகும். ஸ்ரீராமின் மனைவி வந்திதா. இருவரும் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கின்றனர். எனவேதான் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

கல்யாணி பிரியதர்ஷன்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகளாகும். சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் கல்யாணிதான் ஹீரோயின். எனவே தமிழக ரசிகர்களுக்கு வெகுவாக பரிட்சையமானார். ஹிருதயம் போன்ற படமும் இவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது.

ரசிகர்களின் ரியாக்ஷன்: ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று நினைத்து அதிர்ச்சி வெளிப்படுத்தினர். பின்னர் உண்மை தெரிந்ததும் சற்று பெருமூச்சு விட்டனர். சிலரோ, இருவரின் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications