Naam Iruvar Namakku Iruvar Serial: பன்னீர் பட்டர் மசாலாவே பன்னீர் பட்டர் வச்சு இருக்குதே...!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனும், தேவியும் பீச் போயி சுத்திட்டு...இப்போ தனியா ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்போது தேவி மாயனுக்கு பன்னீர் பட்டர் மசாலா வைக்க, ஒரு பன்னீர் பட்டர் மசாலாவே பன்னீர் பட்டர் மசாலா வைத்துகுதேன்னு கவித.. கவித என்பது போல சொல்கிறான் மாயன்.
தேவி ரொம்ப மும்முரமாக நூடுல்ஸை அழகாக.. அதே சமயம் வாயில் வழிந்து நூல் போல தொங்குவதை லாவகமாக வாயில் உரிந்து என்று அழகாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள்.

பூவெடுத்து வைக்கணும்
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால என்று மாயனின் கையில் மதுரை மல்லிச் சரத்தை கொடுத்து, டேய் எனக்கு பூ வச்சு விடுடா என்று திரும்பி நிற்கிறாள். மாயன் ஏங்க விளையாடாதீங்க என்று சொல்லிவிட்டு இவன் தவித்து நிற்க டேய் வச்சு விடு என்று மறுபடியும் சொல்றா தேவி. சந்தோஷமா தேவிக்கு பூ வச்சு விடறான் மாயன்.

ஓடியாடி நனைஞ்சு
பீச்சில் தேவியுடன் ஓடியாடி விளையாடி கடைசியா உடைகள் நனைஞ்சு போயிருச்சு.. பக்கத்துல ஹோட்டல் ரூமில் துணியை காய வச்சுட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாமாங்க என்று தேவியிடம் கேட்கிறான் மாயன். தேவியும் ஓகே சொல்ல இருவரும் ஹோட்டலுக்கு போறாங்க.

பல்லி பயம்
ரூமுக்குள்ள போயி மாயன் டிரஸை தேவி போட்டுக்கிட்டு நிக்கிறா.. அப்படியே பொம்பளை மாயன் மாதிரியே இருக்கீங்க என்று மாயன் நெளியறான். இனிமே நான் இங்கே இருக்கலைங்க...வெளியில் போறேன்னு கிளம்ப.. இவளும் ஓகே சொல்லிட்டு கதவைத் தாழ் போடப் போகிறாள். உடனே கீச்சுன்னு ஒரு குரல்.

மாயன் உள்ளே
மாயன் கதவைத் திறந்துக்கொண்டு ஓடிவந்து என்னங்க ஆச்சு என்று கேட்க..அங்கிருந்த பல்லியை காண்பிச்சு, மாயன் நெஞ்சில் சாய்ந்து அவனைக் கட்டிக் கொள்கிறாள் தேவி.அவன் ஹாயாக அவளை சாய்ந்து இருப்பதை என்ஜாய் பண்றான் .டேய்.. மாயா இருக்கியாடா.. ஜாலிதான் என்பது போல தன்னைத் தானே பாராட்டிக்கிறான்.

சேமியா இல்லை நூடுல்ஸ்
ஏங்க.. இந்த சேமியா உப்புமா நல்லா இருக்குங்க என்று சொல்லி மாயன் நூடுல்ஸை சாப்பிட, தேவி சாப்பிட்டுக்கொண்டே இது நூடுல்ஸனு சொல்றா. நூடுல்ஸா.. நல்லா இருக்குங்க.. என்று சொல்லிவிட்டு இது என்னங்க என்று கேட்கிறான் ஒரு நாணை எடுத்து. நாண் என்று தேவி சொல்ல, ம்ஹூம்.. இன்னிலேர்ந்து இது நாண் இல்லை நீ என்று மொக்கை ஜோக் சொல்றான்... அதுக்கு தானே சிரிச்சுக்கறான்...
பாருங்க இது பன்னீர் பட்டர் மசாலா...இதை ஒரு பன்னீர் பட்டர் மசாலாவே எனக்கு வச்சு இருக்குன்னு சொல்லி கவித.. கவித.. என்கிற பாணியில் இன்னொரு மொக்கை போட்டுட்டான்.












Click it and Unblock the Notifications