Naam Iruvar Namakku Iruvar: புது வீடு...ரெண்டு பொண்டாட்டி.. கலக்குறீங்க மாமா!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் மாமனார் வீடு போதலை என்று, புது வீட்டுக்கு குடும்பமா மாறிட்டார். அப்போ பார்த்து அவரின் இன்னொரு பொண்டாட்டி கொஞ்ச நாளைக்கு உங்க கூட இருக்கேன்னு வந்துட்டாங்க.
இதை பார்த்துதான் மாயன் தன்னோட ஒட்டிப் பிறந்த தம்பி அரவிந்த் கிட்டே,டாக்டர் தம்பி மாமாவைப் பார்த்தியா புது வீடு.. ரெண்டு பொண்டாட்டி கலக்கறாருன்னு சொல்றான்.
ஒரு வாரத்துக்கு வீடு ஒரே எண்டெர்டெயின்மென்டா இருக்கும் போல...உன்னையும் என்னையும் ஆடியன்ஸாக்கிருவாங்கன்னு வேற கிண்டல் அடிக்கிறான்.

அரவிந்த் மாயன்
மாயனும், அரவிந்தும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள். அதே போலத்தான் ஆர்ஜே செந்திலை இரட்டை வேடத்தில் நடிக்க வச்சு இருக்காங்க,. அவரும் நல்ல வித்தியாசம் காண்பித்து நடிச்சு இருக்கார். ஒரே சமயத்தில் பக்கத்து பக்கத்துல நிக்க வச்சு ஷாட் எடுக்கும் நேரத்தில்தான் மாமா பற்றி கிண்டல் அடிச்சு பேசறான் மாயன்.

சந்தன பாண்டியன்
தேவியின் அப்பா சந்தன பாண்டியனுக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டாவது தாரத்துக்கு பிறந்த தாமரையைத்தான் மாயனின் தம்பி அரவிந்த் கல்யாணம் செய்து இருக்கான். முதல் தாரத்து பெண் தேவியை மாயன் கல்யாணம் செய்து இருக்கான்.தாமரை, அரவிந்த், தேவி, மாயன் என்று எல்லாரும் ஒன்று சேர்ந்து இருக்கும் நேரத்தில் முதல் தாரமும் தாமரையோட இருக்கணும்னு ஆசையா வந்து இருக்காங்க.

நம்மை ஆடியன்ஸ்
டாக்டர் தம்பி.. இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த அத்தையும் அந்த அத்தையும் என்ன என்ன செய்யப் போறாங்களோ... இவங்களை வச்சு சந்தன பாண்டியன் எப்படி சமாளிக்க போறாரோ தெரியலை...தம்பி எனக்கு என்னமோ அவர் உன்னை விருந்துக்கு கூப்பிடலைன்னு தோணுதுன்னு மாயன் சொல்றான். பின்னே என்று அரவிந்த் கேட்க...

நீ கெஸ்ட்
புது பொண்டாட்டி அதான் தம்பி இன்னொரு பொண்டாட்டியை விருந்துக்கு கூப்பிட்டுட்டு, உன்னையும் தாமரையையும் கெஸ்ட்டா கூப்பிட்டு இருக்காருன்னு தோணுது. புது பொண்டாட்டி.. புது வீடு கலக்குறாரு மாமா..ஆமாம் தம்பி..ரெண்டு பொண்டாட்டியும் வச்சு எப்படி மாமா ஹேண்டில் பண்ணுவார்? இவருக்கு சான்டில் பாண்டியன்னு பேர் வச்சத்துக்கு பதில் ஹேண்டில் பாண்டியன்னு பேர் வச்சு இருக்கணும் தம்பி என்று மாயன் இஷ்டத்துக்கு கிண்டல் அடிக்கிறான்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications