Naam Iruvar Namakku iruvar: இதுதான் மாயன் கெத்து... தேவிகிட்டேயே காமிச்சுட்டானே!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் மதுரை கெத்து பையன். இவன் பேசறது... நடந்துக்கறதுன்னு எல்லாத்திலும் செம மாஸ் காட்டுவான்.
தேவிக்கும் மாயனுக்கும் முதலிரவு நடந்துருச்சு.. இப்போ மாயன் தன் புருஷன் கெத்தை பொண்டாட்டி தேவிகிட்டேயே காமிக்கறான் பாருங்க... செம காமெடி.
தேவி காபி கொண்டு வந்து கொடுக்க.. ஒரு வாய் குடிச்ச மாயன் காபி கேவலமா இருக்குன்னு பயபுள்ள பட்டுன்னு சொல்லிப்புட்டான்.. என் காபி கேவலமா இருக்கான்னு தேவி கோபமாகிட்டாள்.

என்னடா காபி கேவலமா?
ஏண்டா என் காபி கேவலமா இருக்கான்னு தேவி கோபமாக கேட்க. ஐயையே.. யார் சொன்னது.. சூப்பரா இருக்கே.. என்னா ஒன்னு டிகாக்ஷன் கொஞ்சம் அதிகமா இருக்கு.. சர்க்கரை தூக்கலா இருக்கு அம்புட்டுதேன்னு சொல்லிட்டு என்னா டேஸ்ட்டுன்னு குடிக்கறான். சொல்லிகிட்டே காபியை மொடக்கு மொடக்குன்னு குடிக்கறான். என்னடா கிண்டல் பண்றியா என்று மறுபடியும் கோவம் வந்திருது தேவிக்கு.

எதுக்கு டென்சன்
இப்போ எதுக்கு டென்சன் ஆகறீங்க...உண்மை அதுதானே.. உங்களுக்குத்தான் சமைக்கவே தெரியாதே...அப்புறம் காபி போட்டா எப்படி இருக்கும் கேவலமாத்தானே இருக்கும்னு சொல்றான். பிறகு எதோ நானா இருக்கவே போனாப் போகட்டும்னு எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன்னு சொல்லிட்டு சிரிக்கறான்.

என்னது அட்ஜஸ்டா
என்னது அட்ஜஸ்டா என்று மறுபடியும் தேவி கேட்டு டென்ஷனாகிறாள். என்ன அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கத்த.. அப்போதுதான் சுய நினைவுக்கு வர்றான் மாயன். போச்சுடா என்று மாயனின் தம்பி அரவிந்த் பீதியை கிளப்ப... தாமரை என்னாகப் போகிறதோ என்று முகத்தை வைத்துக்கொண்டு நிற்கிறாள்.

மாயன் தேவி
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆர்ஜெ. செந்திலை விஜய் டிவியின் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கிறார்கள். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி முதல் சீசனை மாபெரும் ஹிட் கொடுத்த நடிகர். இவரின் மனைவி ஸ்ரீஜா இவருடன் மதுர சீரியலில் இணைந்து பின்னர் சரவணன் மீனாட்சி முதல் சீசனிலும் நடித்தார். சீரியல் முடிந்த பிறகுதான் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications